சிவன் மாணிக்கவாசகரை ஆட்கொண்டு, தன்னைப் போலவே (சிவமாகவே) ஆக்கினார். இறைவனின்
பேரருளை வியந்த நிலையில், இவர் பாடிய பாடல்கள் திருவாசகத்தில் "அச்சோ' என்ற பதிகமாக
இடம்பெற்றுள்ளது. இதில் கடைசிப்பாடலில் "நம்மையும் ஒரு பொருளாக்கி நாய் சிவிகை
ஏற்றுவித்து அம்மை எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே' என்று குறிப்பிடுகிறார்.
""நாய் போல இழிந்த என்னையும் ஒரு பொருளாக மதித்து பல்லக்கில் ஏற்றுவித்த தயாபரன்
சிவன். என்னைப் போல புண்ணியத்தை பெறக் கூடியவர் வேறு யாருமில்லையே'' என்று
வியக்கிறார். இந்த பாடலோடு திருவாசகம் நிறைவு பெறுவது குறிப்பிடத்தக்கது. ஒரு பெரிய
அருளாளர் தன்னை நாய்க்கு ஒப்பிட்டது, அனைவருக்கும் தாழ்மை வேண்டும் என்பதைக்
குறிக்கிறது.
பாண்டிய மன்னன் தன் படைபலத்தைப் பெருக்க, குதிரை வாங்கி வரும்படி, தன் அமைச்சர்
வாதவூராரை வேண்டினான். பணத்துடன் புறப்பட்ட மாணிக்கவாசகர் வழியில் ஆவுடையார்கோயில்
என்ற இடத்துக்குச் சென்றார். அங்குள்ள வெயில் காத்த விநாயகர் கோயில் சத்திரத்தில்
அவர் தங்கினார். அன்றிரவு கனவில் தோன்றிய விநாயகர், சிவனுக்குக் கோயில் கட்டும்படி
உத்தரவிட்டார். "ஆனை சொன்னதால், "குதிரை'க்கான பணத்தில் "மாட்டுக்கு' கோயில்
வந்தது' என்று இதனைச் சொல்வர். உயிர்களாகிய நாமெல்லாம் பசுக்கள். நம்மை உடைமையாக
கொண்டிருக்கும் இறைவனாகிய பசுபதியே சிவன். மாடான ரிஷபத்தை வாகனமாகக்
கொண்டிருப்பதாலும், இறைவனுக்கு "(ஆ)வுடையார்' என்று பெயர். தமிழில் "ஆ' என்றால்
"மாடு'
No comments:
Post a Comment