Monday, January 28, 2013

கடவுளிடம் அன்பு செலுத்தும் முறை

கடவுளிடம் அன்பு செலுத்தும் முறை

பக்தியோகம்
பக்தியை ஒரு முக்கோணத்துடன் ஒப்பிடலாம் . அதன் ஒவ்வொரு கோணம் பக்தியை பிரிக்க முடியாத பண்பை குறிக்கிறது. முன்று கோணம் சேராமல் எந்த கோணம் இருக்க முடியாது .அது போல் பின்வரும் முன்று கோணங்கள் இல்லமால் பக்தி இருக்க முடியாது …
முதல் முக்கோணம் அன்பு வியாபார பொருள் அல்ல என்பதாகும் . எதாவது விதத்தில் பிரதிபலனில் நாட்டம் இருக்குமானால் அங்கு உண்மையான அன்பு இருக்க முடியாது .அது வெறும் கொடுத்தல் வாங்குதல் வியாபாரம் .நாம் செலுத்தும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் பிரதிபலனாக கடவுளிடம் ‘அது வேண்டும் ‘ ‘இது வேண்டும் ‘ என்ற எண்ணம் இருக்குமானால் உண்மையான பக்தி வளர முடியாது .தாங்கள் விரும்பிய பலன் கிடைக்கவில்லை என்று அவர்கள் இறைவனை வழிபடுவதை நிறுத்தி விடுவார்கள் என்பது சர்வ நிச்சியம் .உன் அன்பிற்கு பிரதியாக எதையும் கேக்காதே …
உதாரணம் : அழகிய இயற்கை காட்சி ஒன்றை கண்டு அதில் மனத்தை பறிகொடுக்கிறாய். அதற்காக அதனிடம் ஏதோனும் வெகுமதி எதிர்பார்க்கிறையா? இல்லையே ! அது அந்த காட்சியும் உன்னிடம் எதையும் கேட்பதில்லை .அந்த காட்சி உனக்கு பேரானந்தத்தை தருகிறது , உன் உள்ளத்தில் தேங்கி கிடக்கும் மனப் போரட்டங்களை தணிக்கிறது , உன்னை அமைதியில் திளைக்கச் செய்கிறது ,அந்த நேரத்தில் உன்னை எங்கோ ஓர் உயர் உலகிகிருக்கு இட்டு செல்கிறது.உன்னை தெய்விக பரவசத்தில் ஆழ்த்துகிறது .உண்மை அன்பின் இந்த இயல்புதான் நமது முக்கோணத்தில் முதல் கோணம் .
இரண்டவாது கோணம் அன்பு பயம் அறியாதது. பயத்தின் காரணமாக இறைவனை வழிபடுகிறார்கள். தண்டனை கிடைக்கும் என்று பயத்தினால் இவர்கள் இறைவனை வழிபடுகிறார்கள் இவர்களுக்கு இறைவன் ஒரு கையில் சாட்டையும் , மற்றோரு கையில் செங்கோலும் ஏந்திருக்கும் பெரியதொரு உருவம். அவரது கட்டளைக்கு அடிபணியமால் போனால் சாட்டை அடி கிடைக்கும் என்று நடுங்குகிறார்கள் இவர்கள்.மனத்தில் எதாவது பயம் இருக்கும் வரை அன்பு எப்படி வரும்? பயங்கள் அனைத்தையும் வெற்றி கொள்வது அல்லவா அன்பின் இயல்பு !.
உதாரணம் : ஓர் இளம் தாய் தெரு வழியாகச் சென்று கொண்டுருக்கிறரால். அவளை பார்த்துப் ஒரு நாய் குரைக்கிறது அவள் பயந்து போய் அருகில் உள்ள ஒரு வீட்டில் தஞ்சம் புகுகிறரால். மறு நாள் அதே தாய் தன் குழந்தை உடன் சென்று கொண்டுருக்கிறரால். திடிரென்று ஒரு சிங்கம் குழந்தையின் மீது பாய்கிறது. அவள் என்ன செய்வாள் ? சிங்கத்தின் வாயில் தன்னை அர்ப்பனித்தாவது குழந்தையைக் காப்பாற்றுவாள் அல்லவா ? அன்பு எல்லாம் பயங்களையும் வெல்கிறது ..
முன்றாவது கோணமாக இருப்பது, அன்புக்கு போட்டி கிடையாது என்பது தான் . இதுவே பக்தனின் மிக உயர்ந்த லட்சியம். நாம் நேசிப்பவர் மிக உயர்ந்த லட்சிய புருஷராக இல்லாவிட்டால் நமக்கு அவர் மிது உண்மையான அன்பு தோன்றாது. தவறனவர்களிடம் தவறான வழியில் பலர் அன்பு செலுத்தலாம். அனால் அன்பு செலுத்துபனை பொறுத்தவரையில், அவனால் மிக அதிகமாக நேசிக்கப் படுபர் அவனுக்கு மிக உயர்ந்த லட்சியமாகவே விளங்குகிறார். ஒருவன் தனது இலட்சியத்தை மிக மிக தாழ்ந்தவனிடம் காணலாம் ;மற்ற ஒருவன் மிக மிக உயர்ந்தவனிடம் காணலாம். எப்படி இருந்தாலும் தனக்கு லட்சியமாக இருபவரை மனிதன் ஆழ்ந்து நேசிக்கிறான்.
உதாரணம் : காதல் கண்ணிற்கு அட்டக்கருமையனவலும் அழகிய சிகரமாக தெரிவாள் என்று சொல்லப்படுவது உண்மைதான் . முன்றாம் மனிதனுக்கு அவள் அப்படித் தெரிய மாட்டாள் ; அந்தக் காதலனின் காதல் தவறான இடத்தில செலுதபடுவதாக தெரியும் . ஆனால் காதலனோ காதலிடம் அழகின் சிகரத்தையே காண்கிறான். ஒருபோதும் அட்டக்கருப்பை காண்பதில்லை. அழகோ , அழகற்றதோ எதுவாயினும் சரி , நம் அன்பிற்கு பொருள் நமது இலட்சியங்கள் உருவாகி செயல்படும் மையங்கள் ஆகின்றன . மக்கள் பொதுவாக எதை வழிபடுகின்றனர்? பராபக்தனின் லட்சிய உச்சியாக விளங்கும் முழு முதற் கடவுளை அல்ல , அல்லவே அல்ல. ஆணாக இருந்தாலும் சரி , பெண்ணாக இருந்தாலும் சரி, அவரவர் உள்ளத்தில் என்ன இருக்கிறதோ அதைதான் ஒவ்வொருவரும் வழிபடுகின்றனர். ஒவ்வொருவரும் தனது இலட்சியத்தை புறவுலகில் கொண்டு வந்து அதன் முன் மண்டிய்ட்டு வணங்குகின்றனர்.

No comments:

Post a Comment