விரதம் இருப்பவர்கள் சாப்பிடாமல் தான் இருக்க வேண்டுமா?
இறையுணர்வை அடைய உதவும் சாதனம் விரதம். விரதநாளில் உணவு, உறக்கம், சுகபோகங்களை மறந்து முழுமையாக இறைசிந்தனையில் ஈடுபட வேண்டும்.ஒரு வேளை மட்டும் உண்ண வேண்டும். காலை, இரவில் பால்,பழம் சேர்த்துக் கொள்ளலாம். தவறில்லை. விரதம் என்பதற்கு "உறுதியான தீர்மானம்' என்பது பொருள். இறை சிந்தனையில் மன உறுதியோடு ஈடுபட்டாலே விரதம் இருந்த பலன் கிடைத்து விடும்.
சுப்ரபாதத்தை போனில் ரிங்டோனாக வைக்கலாமா?
என்னவெல்லாமோ பாடல்களை வைத்துக் கொண்டு பிறரை முகம் சுளிக்க வைக்கும் இக்காலத்தில் சுப்ரபாதத்தை வைத்துக் கொள்ளலாமா? என கேட்பதே சந்தோஷம் தான். தூங்குபவரை எழுப்புவது சுப்ரபாதம். ஆனாலும், அதே ரிங்டோன் மதியம் 12 மணிக்கும் இருந்தால் என்ன நியாயம்? விழித்துக் கொண்ட பிறகும் சுவாமியை எழுப்பிக் கொண்டிருக்க வேண்டுமா? எந்நேரத்துக்கும் பொருந்தும், நல்ல பக்திப் பாடல் களை வைத்துக் கொள்ளுங்கள். அதுபோதும்.
No comments:
Post a Comment