Friday, January 4, 2013

குழந்தை அர்த்தம்

ஒரு குழந்தை தாயின் கர்ப்பத்திலே உருவானது. அதன் மனதில் பெருமாள் மறைந்து உட்கார்ந்திருப்பதைக் கண்டது. உடனே ஓவென்று அழுதபடியே,""பெருமாளே! ரங்கா! ஏன் என்னை மீண்டும் பூமியில் பிறக்கச்செய்யப் போகிறாய்? இதுவரை எடுத்த பிறவிகளில் நான் பட்டது போதாதா?'' என்றது.
""பட்டேன்.. பட்டேன் என்கிறாயே? அந்த பாடுகளை எல்லாம் நானா தந்தேன்! நீயே இழுத்துக்கொண்டது தானே! போபோ! நீ துவங்கியதை நீதான் முடித்து வைக்க வேண்டும்!'' என்று பெருமாள் பதில் சொல்லவும், தாய்க்கு பிரசவவலி ஏற்பட குழந்தை பூமிக்கு வந்து விட்டது. அதுவரை, அதன் கண்களுக்கு தெரிந்த பெருமாள் இப்போது தெரியவில்லை. "க்வா க்வா' என்று அழ ஆரம்பித்து விட்டது. "க்வா க்வா' என்றால், "எங்கே எங்கே' என்று அர்த்தம். "இவ்வளவு நேரம் என்னுடன் பேசிக்கொண்டிருந்தவனை எங்கே?' என்று அழ ஆரம்பித்து விட்டதாம் குழந்தை. "க்வா க்வா' என்பது தான் இப்போது 'குவா குவா' ஆகியிருக்கிறது. மீண்டும் "க்வா க்வா' போடாமல், பரமபதத்திலேயே தங்க வேண்டுமானால், நம் கண்களில் நல்லது மட்டுமே படட்டும். சரி தானே!

No comments:

Post a Comment