சிவசின்னங்களில் முக்கியமானது ருத்ராட்சம். இதற்கு "சிவனின் கண்' என்று பொருள்.
தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய அசுரர்களை சிவன் நெற்றிக்கண்ணால்
எரித்தார். அப்போது ஏற்பட்ட மகிழ்ச்சியால் ஆனந்தக்கண்ணீர் வழிந்தது. அந்த கண்ணீர்
துளிகளே ருத்ராட்ச விதைகளாக மாறின. ருத்ராட்சத்தில் உள்ள கோடுகளின் எண்ணிக்கையை
முகம் என்று குறிப்பிடுவர். இதில் ஒருமுகம் முதல் பதினாறு முகம் வரை இருக்கும்.
ஒருமுக ருத்ராட்சம் சிறப்பானது. இதை அணிபவர்கள் பூவுலக வாழ்வு முடிந்து சிவலோக
வாழ்வு பெறுவர். ருத்ராட்சத்தை அணிந்து நீராடுவது கங்கையில் குளித்த புண்ணியத்தை
தரும்.
No comments:
Post a Comment