Sunday, January 13, 2013

இறைவன் இருக்கிறாரா?


இறைவன் இருக்கிறாரா?

மன்னன் ஒருவனுக்கு இறைவன் இருக்கிறானா, இல்லையா என்ற சந்தேகம் வந்தது. அரசவைப் புலவரிடம் விளக்கம் கேட்டார். மறுநாள் அரசவைக்கு கறுப்பு நிற பசுவுடன் வந்தார் புலவர்.

அரசர் முன் பசுவை நிறுத்தி, காவலனை அழைத்து பால் கறக்கச் சொன்னார்.

"
மன்னா, இது என்ன நிறப்பசு? கேட்டார் புலவர். பதில் - கறுப்புநிறப்பசு என்றார்."

"
இதன் பால் என்ன நிறம்? வெண்மை என்றார்."

"
இதன் உணவான புல் என்ன நிறம்? பசுமை என்றார்".

"
அரசே... பச்சைநிறபுல்லை தின்னும் கறுப்பு நிற பசு, வெண்மை நிறப்பாலைக் கறந்திட எவர் காரணமோ, அவரே கடவுள்.

புலவர் சொன்னதைக் கேட்டதும் மன்னனின் சந்தேகம் தீர்ந்தது.

No comments:

Post a Comment