Thursday, February 7, 2013

ஸ்ருதி என்றால்

ஸ்ருதி என்றால் என்ன?
 
 
ரிக், யஜுர், சாமம்,அதர்வணம் என வேதம் நான்காகும். வேதம் என்ற சொல்லுக்கு சத்தியமான தத்துவத்தை அறியச் செய்யும் அறிவின் மூல இருப்பிடம் என்று பொருள். வேதம் எந்த மனிதராலும் உருவாக்கப்படவில்லை. அநாதி காலம் தொட்டே இருந்து வருகிறது. கடவுளின் சுவாசக் காற்றாக விளங்குகிறது. பிரம்மா, வேதத்தைக் கொண்டே படைப்புத் தொழிலை மேற்கொண்டார். வேதத்திற்கு ச்ருதி (ஸ்ருதி) என்ற பெயருண்டு. ச்ரோத்ரம் என்ற சொல்லுக்கு காது என்று பொருள். சுவடிகளில் எழுதிப் படிக்காமல், குரு சொல்ல, சிஷ்யர்கள் காதால் கேட்டு மனனம் செய்து வந்ததால் வேதத்தை ஸ்ருதி என்றனர்.

No comments:

Post a Comment