Saturday, February 2, 2013

வீடு தேடி வந்தவர்களை உபசரிப்பீர்களா

நம் வீட்டுக்கு வந்த விருந்தினரை, ஓரிரவு பட்டினி போட்டால் போதும். வந்தவரின் பாவத்தில் பாதி நம்மைச் சேர்ந்து விடும். அது மட்டுமல்ல! மீளா நரக வாழ்வும் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். இதோ! உபசரிப்புக்கு ஒரு கதை!
மழைகாலத்தில் காட்டிற்கு சென்ற வேடன் கையில், குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த பெண்புறா சிக்கியது. ஆண்புறா அதைக் காணாமல் வருத்தத்துடன் இருந்தது. ""என் அன்பு மனைவியே! நீ காணாமல் போன பின், எனக்கு இவ்வுலகில் வாழ விருப்பமில்லை. நான் சாகிறேன்,'' என்று புலம்பிக் கொண்டிருந்த வேளையில், அது அமர்ந்திருந்த மரத்தடியில் வேடன் ஒதுங்கினான். தன் துணையின் புலம்பல் கேட்ட பெண்புறா, ""அன்பரே! நான் விதிவசத்தால் இந்த வேடனிடம் சிக்கிவிட்டேன். இதோ! இந்த வேடன் நம் இடத்தைத் தேடி வந்துள்ளான். நம் இருப்பிடம் வருபவர் எதிரியே ஆயினும் நமக்கு விருந்தினரே! சாஸ்திரப்படி, நாம் அவரை உபசரிக்க வேண்டும்,'' என்றது.
ஆண்புறா அதை ஏற்று, சுள்ளிகளைப் பொறுக்கி வந்து நெருப்பு பற்ற வைத்தது. பின், வேடனிடம், ""பசித்திருக்கும் உமக்கு கொடுக்க என்னிடத்தில் ஏதுமில்லை. நான் இந்த நெருப்பில் விழுகிறேன், என் இறைச்சியை சாப்பிடும்,'' என்று சொல்லி
அதன்படியே செய்தது. இதைக்கண்ட பெண் புறாவும் நெருப்பில் விழுந்து உயிர்விட்டது. வேடன் மனம் திருந்தி வேட்டைத்தொழிலைக் கைவிட்டு, தவமிருக்க ஆரம்பித்து விட்டான்.
இனியேனும், வீடு தேடி வந்தவர்களை உபசரிப்பீர்களா!

No comments:

Post a Comment