Saturday, February 2, 2013

தினசரி ஹோரைகள்

ஹோரைகள் என்பது ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்ட ஒரு நாளின் ஒரு மணி நேர கால அளவு ஆகும்.
ஒரு வாரத்தில், சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனம் நேரம் தொடங்கி ஏழு நாட்கள் உள்ளன. ஒரு மணிக்கு ஒரு கிரகம் வீதமாக இந்த ஒவ்வொரு நாளையும் (24 மணி நேரம்) ஏழு கிரகங்கள் ஆட்சி செய்கின்றன
.
ஆளும் கோள்களின் தன்மையைப் பொறுத்து ஹோரைகள் பல்வேறு பணிகளுக்கு பொருத்தமானதாகவோ அல்லது பகையானதாகவோ உள்ளன. இதன் மூலம் ஒரு காரியம் செய்யப் பொருத்தமான நேரத்தைனைத் தேர்ந்தெடுக்க பயன்படுத்தலாம். பின்வரும் ஹோரைகள் விளக்கப்படம், ஒரு நாளில் எந்த நேரத்தில் எந்தெந்த கோள்கள் ஆளுகின்றன எனக் காட்டுகிறது
.
ஹோரைகளைக் பார்க்கும் போது, உங்கள் இடத்தின் அன்று சூரிய உதயம் நேரம் அறிந்து அதிலிருந்து முதல் 1 மணி நேரத்தினைக் கணக்கிட்டுக் கொள்ளவும். சூரிய உதய நேரத்தை பஞ்சாங்கம் மூலமாகவோ. பத்திரிகைகள் வாயிலாகவோ தெரிந்து கொள்ளலாம்
.

சுப கிரக ஹோரைகள் : சந்திரன்
, புதன், குரு,
சுக்கிரன்

பாப கிரக ஹோரைகள் :
சூரியன், செவ்வாய், சனி
 
தினசரி ஹோரைகள் - சூரிய ஹோரை



சூரிய ஹோரையானது அனைத்து அரசியல் பணிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கு மேடைப் பேச்சு மற்றும் அரசியல் சம்பந்த பேச்சு வார்த்தைகளுக்கும், தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் சந்திப்புக்கும், வேலைகளுக்கு விண்ணப்பிக்கவும், நீதிமன்றம் தொடர்பான தொடர்புக்கும், வாங்குதல் மற்றும் விற்பனை செய்யவும் மற்றும் சாகசப் பணிகள் மேற்கொள்ளவும் உகந்தது.



தினசரி ஹோரைகள் - சந்திர ஹோரை

சந்திர ஹோரையானது பணியில் சேரவும், பெரியவர்களைச் சந்திக்கவும், பயணம் மேற்கொள்ளவும், இடம் மற்றும் குடியிருப்பு மாற்றத்திற்கும், வீடு மற்றும் சொத்து தொடர்பான விஷயங்களை மேற்கொள்ளவும், காதலி (அ) காதலனைச் சந்திக்கவும், காதல் சம்பந்தமான செயல்களுக்கும், நகைகள் வாங்க (அ) அணிந்து கொள்ளவும், தியானம் செய்யவும், துணிமணிகள் வாங்கவும் மற்றும் விற்பனை செய்யவும், நீர் சம்பந்தமான பணிகளுக்கும், படைப்பு மற்றும் கலை சம்பந்தமான பணிக்கும் உகந்தது.
தினசரி ஹோரைகள் - செவ்வாய் ஹோரை

செவ்வாய் ஹோரையானது நிலம் மற்றும் விவசாயம் தொடர்பான விஷயங்களை கையாளவும், வாகனங்களை வாங்கவும் மற்றும் விற்கவும், மின்சாரம் மற்றும் பொறியியல் பணிகள் செய்யவும், துணிகரமான பணிகள் மற்றும் விளையாட்டுகளிள் ஈடுபடவும், கடன் கொடுக்கவும், வாங்கவும், உடல் பயிற்சிகள் மற்றும் தற்காப்பு கலை கற்றுக்கொள்ளவும், சகோதரர்கள் தொடர்பான விஷயங்களில் தலையிடவும், நெருப்பு சம்பந்தமான பணிக்கும் உகந்தது.

இந்த ஹோரை காலத்தில் சண்டை மற்றும் மோதல்களைத் தவிர்க்க வேண்டும்.
தினசரி ஹோரைகள் - புதன் ஹோரை


புதன் ஹோரையானது வர்த்தக மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களுக்கும், வேதங்களை படித்ததல், கற்றல் மற்றும், பயிற்றுவிப்பதற்கானப் பணிக்கும், ஜோதிடம் பார்க்கவும், எழுத்து வேலைக்கும், அச்சிட்டல், வெளியிடல் தொடர்புள்ள பணிகளுக்கும், ஆபரணங்கள் வாங்கவும் அல்லது அணியவும், கணக்குகள், கணக்கீட்டு வேலைகளுக்கும், தொலைத்தொடர்பு மற்றும் கணினி தொடர்பான விஷயங்களுக்கும் உகந்தது.
தினசரி ஹோரைகள் - குரு ஹோரை


வியாழ ஹோரையானது அனைத்து நல்ல பணிகள் செய்யவும், வேலையில் இணையவும், தொழிலை தொடங்கவும், பெரியவர்களைச் சந்திக்கவும், ஒரு புதிய கற்றலை தொடங்கவும், நீதிமன்றம் தொடர்பான விஷயங்களுக்கும், அனைத்து மத சம்பந்தமான பணிகள் செய்யவும், திருமண பேச்சு, பயணங்கள் மற்றும் புனித யாத்திரைக்கு உகந்தது.
தினசரி ஹோரைகள் - சுக்கிர ஹோரை


சுக்கிர ஹோரையானது காதல் மற்றும் திருமணம் தொடர்பான விஷயங்களுக்கும், நகைகள் மற்றும் துணிகள் வாங்கவும் மற்றும் விற்க்கவும், பொழுதுபோக்கு மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களுக்கும், புதிய வாகனங்களை வாங்கவும் அல்லது பயன்படுத்தவும், நடனம் மற்றும் இசை தொடர்பான விஷயங்களுக்கு உகந்தது.
தினசரி ஹோரைகள் - சனி ஹோரை


சனி ஹோரையானது தொழிலாளர் தொடர்பான ஒப்பந்தம் விஷயத்திற்க்கும், எண்ணெய் மற்றும் இரும்பு தொடர்பான வணிகங்களுக்கும் உகந்தது.

இது மற்ற அனைத்து நல்ல காரியங்களுக்கும் உகந்ததல்ல

No comments:

Post a Comment