Wednesday, February 6, 2013

காசியில் தொலைந்த பை !!


காசியில் தொலைந்த பை !!
=====================
பெரியவாளுடையமுரட்டுபக்தர்களுள் ஒருவர் கல்யாணசுந்தரமையர். ஒருமுறை காசிக்குப் போய் தன் அப்பாவுக்கான ஸ்ராத்தாதிகளை பண்ணவேண்டும் என்பது அவருடைய நெடுநாள் ஆசை. அடிக்கடி காசிக்கு போய்வரும் மற்றொரு பக்தரிடம் காசியில் உள்ள சங்கர மடத்தைப் பற்றி தெரிந்து கொண்டு, தன் பயணத் திட்டத்தை அழகாக தயார் பண்ணிக்கொண்டார். பெரியவாளுடைய அனுக்ரகத்துடன் காசி போய் சேர்ந்து த்ருப்தியாக கார்யங்களைப் பண்ணினார். நல்லபடியாக எல்லாம் நடந்து கொண்டிருக்கும்போது, ஒருநாள் காசி விஸ்வநாதரையும் அன்னபூரணியையும் தர்சனம் பண்ணிவிட்டு, சங்கர மடத்துக்கு வருவதற்கு ஒரு சின்ன சந்தைக் கடந்து வரவேண்டும். இவரோ, கையில் ஒரு சின்ன பிளாஸ்டிக் பையில் தங்களுடைய டிக்கெட், பணம்,பயண விவரம் என்று எல்லாவற்றையும் பத்திரமாக வைத்து, அந்த பிளாஸ்டிக் பையை ஒரு சின்ன மஞ்சள் துணிப்பைக்குள் பத்திரமாக வைத்திருந்தார். காஞ்சி காமகோடீஸ்வரர் கோவிலுக்குப் போய்விட்டு, வெளிப் பிராகாரத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு தன்னுடைய அடுத்தபிளான்என்ன? என்பதற்காக தன்னுடைய ‘bag ‘ கில் இருந்த மஞ்சள் பையை துழாவினால், காணோம்! “பகீர்என்றது!

சர்வேஸ்வரா! மஹா ப்ரபோ!” என்று வாய்விட்டே அலறிவிட்டார்! உடலெல்லாம் நடுங்குகிறது. கண்களில் தாரைதாரையாக கண்ணீர்! இனி அடுத்து என்ன செய்வது? ஆகாரத்துக்குக் கூட கையில் சல்லிக்காசு கிடையாது! கண்கள் இருட்டிக் கொண்டு வர, அங்கிருந்த தூணில் சாய்ந்துவிட்டார்! குடும்பத்தார் கோவிலுக்குள் இருந்ததால், இவருடைய நிலைமை தெரியாது. “சர்வேஸ்வரா! ஒன்னை நம்பித்தானே இவ்வளவு தூரம் குடும்பத்தோட கெளம்பினேன்? இப்பிடி என்னை நிர்கதியா தவிக்கவிட்டுட்டியே?” என்று வாய்விட்டு அரற்றினார், புலம்பினார். அவரைக் கடந்து போனவர்கள் இவருடைய பாஷை புரியாததால், பாவம், பகவானிடம் புலம்புகிறார் போலிருக்கு என்று பரிதாபமான பார்வையை வீசிவிட்டுப் போனார்கள். சுமார் ரெண்டு மணிநேரம் இந்த புலம்பல். குடும்பத்தாரும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினார்கள்.

பெரியவாளுடைய அனுக்ரகம் இப்போது வேலை செய்ய ஆரம்பித்தது…………குடும்பமே இடிவிழுந்த மாதிரி சோகமாக உட்கார்ந்திருக்கும்போது, சத்தமே இல்லாமல் ஒரு சைக்கிள்

ரிக்ஷா கோவிலுக்கு எதிரில் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு வயஸானபெரியவர்இறங்கினார். லுங்கி அணிந்திருந்தார். அவரது கையில்மஞ்சள் பை”. ரொம்பத் தெரிந்தவர் போல் நேராக கல்யாண சுந்தரமையர் இருந்த இடத்தை நோக்கி வந்தார்……..

இது ஒன்னோடதா பாரு! வழில தவறவிட்டுட்டு வந்துட்டியே!” என்று கண்டிப்புடன் ஹிந்தியில் சொன்னார். மஹா அதிர்ச்சியுடன் மஞ்சள் பையை வாங்கிக் கொண்டு, அந்த பெரியவருக்கு நன்றி சொல்ல தலையை தூக்குவதற்குள், வந்த வேகத்தில் போய்விட்டார்! கோவிலில் இத்தனை கும்பல் இருக்கும்போது, அந்த பெரியவர் சரியாக இவரிடம் வந்து எப்படி பையைக் குடுத்தார்? அதுவும் ரெண்டு மணி நேரம் கழித்து! வந்தவர் மாயமாக உடனே எப்படி மறைந்தார்?

பைக்குள் எல்லாம் பத்திரமாக அப்படியே இருந்தது. காஞ்சிபுரம் இருக்கும் திசையை நோக்கி விழுந்து விழுந்து கும்பிட்டு, அழுவதைத் தவிர அக்குடும்பத்தாரால் அப்போதைக்கு வேறு எதுவும் பண்ணத் தோன்றவில்லை

No comments:

Post a Comment