** அசரீரி என்பதன் பொருள் என்ன?
உயிர்கள் அனைத்திற்கும் உடம்பு உண்டு. உடம்பை சமஸ்கிருதத்தில்"சரீரம்' என்பர். சரீரத்தைப் பெற்றிருப்பதால் உயிர்களுக்கு "சரீரி' என்று பெயர். இதைப் போல தேவதைகளுக்கும் உருவம் உண்டு. அவற்றை காணும் சக்தி நமக்குக் கிடையாது. இருந்தாலும், பக்தர்களை ஆட்கொள்ளும் விதத்தில் சப்த வடிவில் நம்மோடு தொடர்பு கொள்வதாக சாஸ்திரம் கூறுகிறது. சுயவடிவமான சரீரத்தைக் காட்டாமல் வெறும் ஒலி வடிவில் கேட்பதை "அசரீரி' என்று குறிப்பிடுகிறோம்
* திருமாங்கல்யத்தில் லட்சுமிகாசு, மணி ஆகியவற்றை கோர்ப்பதன் நோக்கம் என்ன?
திருமணம் முடிந்த மூன்றாம் மாதத்தில் மணப்பெண்ணுக்கு சுமங்கலிகள் நடத்தும் சடங்கு தாலி பெருக்குதல். முதன் முதலில் மஞ்சள் கயிற்றை மாற்றும் சடங்கு இது. புதிதாக மாற்றும்போது, மங்கல ஆபரணமான தாலியோடு லட்சுமி காசு, மணி ஆகியவற்றை சேர்ப்பதன் மூலம் தீர்க்கசுமங்கலியாக வாழும் பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.
No comments:
Post a Comment