Sunday, February 3, 2013

எந்த விஷயத்தையும் அதிகாலையில் தொடங்குவது அதிக நம்மை பயக்கும்

அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள்

எந்த விஷயத்தையும் அதிகாலையில் தொடங்குவது அதிக நம்மை பயக்கும் என்று முன்னோர்கள் சொல்லிவைத்து இருக்கிறார்கள். அதிகாலை நேரத்தை பிரம்ம முகூர்த்தம் என்றும் சொல்வார்கள். திருமணம் - புதுமனைபுகுவிழா இரண்டும் அதிகாலையில் செய்வது மிகவும் விசேஷம். எனவே நமது அலசலையும் அதிகாலையில் இருந்தே ஆரம்பிபோமா?

அப்படி என்ன சிறப்பு அதிகாலைக்கு?

ஓஸோன் நிரம்பிய தூயகாற்று, புறச் சலனங்கள் அதிகம் கிடையாது. எனவே எதிலும் இயல்பாக ஒன்றும் ஆற்றல் அதிகரிக்கிறது. எனவேதான் பாரதியும் காலை எழுந்ததும் படிப்பு என்று சொல்லிவைத்தான். பின்னர் யோக - உடற்பயிற்சி - நடைபயிற்சி - ஆலயவழிபாடு இத்யாதி - இத்யாதி.

ஆலயதரிசனத்திலும் உறைக்காலதரினம் என்ற அதிகாலை தரிசனம் வெகுசிறப்பு. தில்லையில் இந்த தரிசனம் வெகுஜனக் ஈர்ப்பு, இது ஆண்டுமுழுவதும். நடக்கும் அற்புத தரிசனம்.

ஆண்டுமுழுவதும் இல்லாவிட்டாலும் ஒருமாதம் மட்டுமானது அதிகாலை தரிசனம் செய்வது அவசியம். அது எந்த மாதம்? மார்கழிக்கும் மட்டுமே இந்த சிறப்பு. எனவேதான் அந்த மாதவன் சொல்லிவைத்தான் மாதங்களில் நான் மார்கழி என்று. இதையே சற்று மாற்றி 'மாதங்களில் அவள் மார்கழி' என்று கவிஞர் வர்ணிக்கிறார்.

மார்கழிப் பனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவே மார்கழி பஜனை. திருப்பாவை - திருவெம்பாவை பாராயணம், பின்னர் மிளகுப் பொங்கல் - சுண்டல் போன்ற பனி எதிர்ப்பு உணவுகள். இந்த பனிக்காலம் பற்றி ஒரு நயமான விளக்கம்.

No comments:

Post a Comment