Sunday, February 3, 2013

மனித உடலில் பத்து விதமான வாயுக்கள் இருந்து ஆட்சி செய்கிறது

மனித உடலில் பத்து விதமான வாயுக்கள் இருந்து ஆட்சி செய்கிறது. இவற்றில் வரும் ஏற்ற தாழ்வுகள் உடலில் பல வித வியாதிகளை உருவாக்குகிறது. இவை எங்கு, எப்படி ஆட்சி நடத்துகிறது என பார்ப்போம்.
  1. பிராண வாயுவானது மூலத்தின்மேல் தொடர்ந்து ஓங்கி பன்னிரண்டு அங்குலம் வெளிப்பையும். இப்பன்னிரண்டு அங்குலத்தில் எட்டு அங்குலம் நின்றும் நானங்கு அங்குலம் வெளியிலும் ஓடும்.
  2. அபானன் வாயு மல சலத்தை அறிந்து போக்கும்.
  3. வியானன் வாயு உண்ட சாரத்தைப் பிரித்தெழுப்பி எழுபத்தீராயிரம் நாடிக்கு ஊட்டும்.
  4. உதானன் வாயு அவற்றை செரிப்பிக்கும்.
  5. சமானன் வாயு அவற்றை சரிப்படுத்தும்.
  6. நாகன் வாயு விக்கல், சோம்பல் இவைகளை உண்டாக்கும்.
  7. கூர்மன் வாயு கண்ணில் நின்று இமைக்க செய்யும்.
  8. கிரிகரன் வாயு - கோபத்தை உண்டாக்கும்
  9. தேவதத்தன் வாயு கொட்டாவி, சிரிப்பு முதலியவைகளை உருவாக்கும்.
  10. தனஞ்சயன் வாயு - உச்சி வாழ்ந்து அத்துமம் அடங்கிய பின் சிரசின் வழியாகப் போகும். அதுவரை உயிரை பாதுகாக்கும்.
சரி! இவற்றில் வரும் வித்தியாசங்களை எப்படி சமன் படுத்துவது. அதற்குத் தான் நம் பெரியவர்கள் "பிராணாயாமம்" என்கிற முறை கண்டுபிடித்து நமக்கு தந்துள்ளார்கள். இருபத்துஒறு முறை சரியான வழியில் பிராணாயாமம் செய்ய, எத்தனை நேரம் "கும்பத்தில்" இருக்கிறோம் என்பதை பொறுத்து சமநிலை வாய்க்கும். பிராணாயாமம் சரியாக செய்கிறோமா என்று சோதித்து அறிந்து கொள்ள வேண்டுமானால், கவனியுங்கள். இருபத்து ஒரு முறை செய்து முடித்தபின் தலை உச்சியில் வியர்வை வழிந்தால், நீங்கள் செய்தது சரியே. இதை தினமும் செய்து வர, எந்த மருந்தும் நம் உடலுக்கு தேவை இல்லை. வாழ்க நலமுடன்.

No comments:

Post a Comment