அவ்வையார் எழுதிய நூல் ஆத்திசூடி. இது சிவனுடைய பெயர்களில் ஒன்று. சிவன் தலையில் 
பிறைச்சந்திரன், கங்கை, நாகம் ஆகியவற்றை சூடியிருப்பதோடு கொன்றைப்பூவையும், 
ஆத்திமலரையும் சூடியிருப்பார். ஆத்திப்பூ, இளம் மஞ்சள் நிறத்தில் பிறைச்சந்திரன் 
போல இருக்கும். இதனை வடமொழியில் "அகஸ்தி' என்று குறிப்பிடுவர். அதுவே அகத்திப்பூ 
ஆகி ஆத்திப்பூ என்றாகி விட்டது. ஆத்திப்பூவை சூடியவர் என்பதால் சிவனுக்கு 
"ஆத்திசூடி' என்ற திருநாமம் உண்டு. ஆத்திசூடியில் வரும் கடவுள்வாழ்த்துப் பாடல் 
சிவனைப் பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment