Thursday, March 14, 2013

பூஜை செய்யும் பொழுது ஆண்கள் விளக்கேற்றலாம். குளிரவைக்கக்கூடாது என்கிறார்களே!

* பூஜை செய்யும் பொழுது ஆண்கள் விளக்கேற்றலாம். குளிரவைக்கக்கூடாது என்கிறார்களே!


 

சில விஷயங்கள் ஆண்டாண்டு காலமாக முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டு நம்முடைய பழக்க வழக்கங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. வழக்கத்தில் உள்ள சில விஷயங்களுக்கு சாஸ்திரங்களில் கூட பதில் கிடைக்காது. இருந்தாலும் அதனை மாற்றி அமைக்க நமக்கு அதிகாரம் கிடையாது. ஆன்மிக விஷயங்களில் சில பிரச்னைகள் ஏற்பட்டு அவை பெரிதாக்கப்பட்டு உச்சநீதிமன்றம் வரை கூட சென்று நீதிபதிகளால் தீர்ப்பு வழங்கப்படும் பொழுது எடுத்தாளப்படும் சட்ட ரீதியான ஒரு சொல் Customs and Usage (பழக்க வழக்கம்) என்பதாகும். இதனடிப்படையிலேயே கோயில்களிலும் சரி, வீடுகளிலும் சரி.. சில விஷயங்களை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று இருந்தால் கேள்வி கேட்காமல் அதை அப்படியே செய்வது நல்லது. தீபங்களை யார் வேண்டுமானாலும் ஏற்றலாம். பெண்களின் கைகளினால் குளிரச் செய்வது குடும்பத்திற்கு நல்லது என்று இருப்பதனால் அதனையே நாமும் பின்பற்றுவோமே. கோ பூஜையை பசுமாட்டின் பின்புறம் தான் செய்ய வேண்டும் என்பது வழக்கத்தில் இருந்து வருகிற ஒன்று. ஏனெனில் அங்கு தான் மஹாலட்சுமி இருப்பதாக ஐதீகம். இது சம்பந்தமாக காஞ்சி மகாசுவாமிகளிடம் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு மேற்கூறிய நிலையிலேயே பதில் கூறி சில சம்பிரதாயங்களை அப்படியே செய்தால் "satisfaction''' என்றும், மாற்றிச் செய்வது Dissatisfaction என்றும் கூறி அருளியது இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

No comments:

Post a Comment