Thursday, March 14, 2013

அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்னும் போது கடவுளால் நன்மை மட்டும் தானே நடக்க வேண்டும்?


**அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்னும் போது கடவுளால் நன்மை மட்டும் தானே நடக்க வேண்டும்?

நல்லவர்கள் நல்லது செய்தலும், தீயவர்கள் தீயது செய்தலும் கூட அவனருளால் தான். போன பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களின் பலனையே இப்பிறவியில் இன்பமும் துன்பமுமாகக் கலந்து அனுபவிக்கிறோம். நல்லவர்களுக்குத் தீமை ஏற்படுவது அவர்கள் செய்த ஊழ்வினையினாலேயே ஆகும். தீயவர்கள் தீயன செய்வதும் கூட இப்பிறவியில் அவர்கள் அதனைச் செய்து, அதற்கான பாவத்தை சம்பாதித்து மீண்டும் பிறவியெடுத்தும், துன்பப்பட்டும் பக்குவப்படவேண்டும் என்பதற்காகத்தான். எல்லா உயிரினங்களாகவும் இறைவன் இருப்பதாக ஸ்ரீருத்ரம் என்னும் வேதமந்திரம் குறிக்கிறது. "எல்லா உயிர்களும்' என்று பொதுவில் குறிப்பிடும்போது நல்லவர்களும், தீயவர்களும் அதில் அடங்குவர். இப்பிறவியில் திருடனாகப் பிறந்து திருட்டுத்தொழில் செய்து அதற்கான துன்பத்தை அடுத்த பிறவியில் பெறுபவனும், என்றாவது ஒருநாள் பக்குவம் அடைந்தே தீரவேண்டும். தங்கத்தை பலமுறை தீயில் இட்டு மாற்று அடித்தால் தானே பளபளக்கும்! இது போலத்தான், உயிர்களும் பலபிறவிகள் எடுத்து நன்மையும் தீமையும் பெற்று பக்குவமடைந்த பின் இறைவன் பேரின்பத்தை வழங்குவார். இதையே "அவனன்றி ஓர் அணுவும் அசையாது' என்கிறோம்.

No comments:

Post a Comment