சிவபெருமான் நந்தியின் கொம்பு நடுவில் நடனமாடுவது ஏன்?
பிரதோஷ வேளையில், நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று, சிவபெருமான் நடனமிடுகிறார். அவரை அருகம்புல்லால் அலங்கரித்து, நனைத்த பச்சரிசி, வெல்லம், பழம், ஏலக்காய் கலந்த காப்பரிசியை நிவேதனம் செய்வார்கள்.
நந்தியின் கொம்புகளுக்கு நடுவிலுள்ள பகுதியை ஏன் தரிசனம் செய்ய வேண்டும் தெரியுமா? சிவபெருமான் எப்போதும் தாண்டவம் ஆடுபவர் தான். அதாவது, அவர் அசைந்தால் தான் இந்த உலகம்
அசையும்.
அசையும்.
உலகத்தின் இயக்கமே அவரது அசைவில் தான் உள்ளது. இந்த அசைவை அவர் நிறுத்திவிட்டால், உலகம் அழிந்து விடும். பிரதோஷ வேளையில், அவர் ஆனந்தமாக நடனமாடுகிறார்.
இதை முதன்முதலாக நந்திதேவர் பார்த்தபோது, அவரது பெரும் மகிழ்ச்சியடைந்தார். அந்த மகிழ்ச்சியில் பூரித்த அவரது உடல் பருத்துக் கொண்டே போனது.
ஒரு கட்டத்தில், பின்னால் நின்று அந்த தரிசனத்தைக் கண்ட சிவ பூதகணங்களுக்கு அது தெரியாமல் போகவே, அவர்கள் நந்தியின் கொம்புகளுக்கு இடையே பார்த்து தரிசித்தனர். இதன் காரணமாக, பிரதோஷ வேளையில் நந்தியின் கொம்புகளுக்கு நடுவழியாக சிவனை தரிசிக்கும் வழக்கம் ஏற்பட்டது.
No comments:
Post a Comment