Thursday, April 4, 2013

கடவுள் என்று ஒன்று என்று சொல்பவர்களுக்கு :

<கடவுள் என்று ஒன்று என்று சொல்பவர்களுக்கு : ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடாகியிருந்தது.அதற்கு ஒரு நீதிபதி அவர்களை தலைமை தாங்கிட அழைத்திருந்தனர்.அந்தக் கூட்டம் கடவுள் இல்லையென்று கூறும் நாத்திகவாதிகளால் கூட்டப்பட்டிருந்த கூட்டம். அந்த நீதிபதி அவர்களோ,கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கையுடையவர். அவர் தனது இஷ்ட தெய்வத்தின் பெயரைச் சொல்லிப் பேச ஆரம்பித்தார். உடனே,அந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த நாத்திகர், “நான் பார்க்காத எதையும் நம்ப மாட்டேன்” என்றார். அதற்கு அந்த ஆத்திக நம்பிக்கை கொண்ட நீதிபதி, “அப்பா! உனது மூளை எனது கண்களுக்குத் தெரியவில்லை;அதற்காக அது இல்லை என நான் நம்புவது அழகா?” எனக் கேட்டார். நாத்திகத்தை தனது கொள்கைகளாகக் கொண்ட சகோதரர்கள் சிந்திக்கவே இந்த நிஜக்கதை. நன்றி;இராமகிருஷ்ண விஜயம்,ஜனவரி,2011.

1 comment:

  1. கடவுள் என்று ஒன்று என்று சொல்பவர்களுக்கு:

    நாத்திகர் : என் மண்டையை உடைத்துகொண்டால் என் மூளையை உங்களால் பார்க்க முடியும்
    உங்கள் கடவுளை உங்களால் காண்பிக்க முடியுமா?

    ReplyDelete