தினமும் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை என கலியுகத்தில் அரக்கத்தனமான செயல்கள் அதிகமாகி வருகிறதே, என்ன காரணம்?
உலகநாதன் என்ற பழம்பெரும் புலவர், ஐந்து பேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம் என நீதிநூலில் பாடியுள்ளார். அதன் பொருள் கூலியை உடனுக்குடன் கொடுத்து விடவேண்டும் என்பதே ஆகும்:
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் கூலி
சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி
மகா நோவுதனை தீர்த்த மருத்துவன் கூலி
வஞ்சமர நஞ்சருத்த மருத்துவச்சி கூலி
இன்சொல்லுடன் பேணி வளர்த்த
தாய் தந்தை கூலி
கலிபுருஷன் இந்த யுகத்தின் அரசனாக இருப்பதால்தான் இப்படியெல்லாம் நிகழ்கிறது என்பதை உணர முடிகிறது. குடும்பி, துறவி, ஏழை, செல்வந் தன், படித்தவன், படிக்காதவன் என்று அனைவருக்கும் பேராசையை ஏற்படுத்தி, கூலி கொடுக்க மனமில்லாதபடி கலி செய்கிறாரோ என்றுதான் தோன் றுகிறது. இந்தப் பாடலைக் கொண்டு மற்ற எல்லா விஷயங்களையும் ஒப்பு நோக்க வேண்டும். அந்தந்த தர்மத்திற்குரிய விஷயங்களை சரியாகச் செய்ய வேண்டும். தான் எந்த விஷயத்தில் ஈடுபட்டிருக்கிறோமோ அதில் தர்மமாக நடந்து கொள்ள வேண்டும். தனி மனித தர்மம்தான் ஒட்டுமொத்த மனிதர்களை பாதிக்கவும் செய்கிறது. தனி மனித ஒழுக்கம் சுற்றியுள்ளோரை மாற்றும் சக்தி வாய்ந்தது

No comments:
Post a Comment