Thursday, May 9, 2013

தைப் பொங்கல் எனப்படும் சங்கராந்தி இறைவனின் பண்டிகையா? இயற்கையின் பண்டிகையா?

தைப் பொங்கல் எனப்படும் சங்கராந்தி இறைவனின் பண்டிகையா? இயற்கையின் பண்டிகையா? இறைவனின் உத்தரவை நிறைவேற்றும் கோள்களின் அரசனான சூரிய பகவான் தனது தேரை திருப்பி பூவுலகைப் பார்க்கிறான். அந்தநாள்தான் சங்க ராந்தி. அதனால்தான் அன்று ஆதவனை வழிபட்டு பொங்கல் வைக்கிறோம். இதை சாதாரண இயற்கை நிகழ்வாக ஒதுக்கிவிடாமல், இறைவனின் சக்தி எப்பேற்பட்டது என்று உவகையோடும் பக்தியோடும் நாம் பண்டிகையைக் கொண்டாடுகிறோம். இயற்கை என்று அலட்சியமாகக் கருதி, மாபெரும் நிகழ்வை சாதாரணமாகப் பார்க்காதீர்கள். பலர் பேசும்போதே அதெல்லாம் இயற்கைதானே என்று என்னமோ ஒரு தனி மனிதர் காரை திருப்புவது போல் பேசுகிறார்கள். சூரியனைப் பற்றி அறிவியல் நூலை படித்தாலே அது சாதாரணமான விஷயம், வெறும் இயற்கை சமாச்சாரம் அல்ல என்பது புரியும். அதைத் தாண்டி சூரியனுக்கு ஆன்மிக முக்கியத்துவமும் உண்டு. இந்து சமய நூல்களை தேடிப்பிடித்து படியுங்கள். தெளிவு பெறுங்கள்.

No comments:

Post a Comment