Thursday, June 27, 2013

கண்ணா ! உன்னுடைய தலை சிறந்த அன்பு கொண்டிருப்பது யார்

பகவானுக்கு பாத நீரை தைரியமாக கொடுத்தது ?
_________________________________________________

பகவான் கிருஷ்ணர் அவரது மனைவி ருக்மணியுடன் , துவாரகையில் வசித்து வந்தார். ஒரு நாள் ஒரு முனிவர் , கண்ணா ! உன்னுடைய தலை சிறந்த அன்பு கொண்டிருப்பது யார் எனக் கேட்டார் ?, ருக்மணி தன் பேரை தான் பகவான் சொல்லுவார் என ஆவலுடன் எதிர் பார்த்து இருந்தாள். அப்போது கிருஷ்ண பரமாத்மா சொன்னார், என் மேல் அதிகமான அன்பு வைத்திருப்பது ராதா தான், என்றார். ருக்மணி கோபத்துடனும், பொறாமையுடனும் உள்ளே சென்று விட்டாள். கிருஷ்ணர் புன்னகைத்து கொண்டார்.
சில நாட்கள் கழித்து, கிருஷ்ணர் ஒரு நாள் தீராத வயிற்று வலி வந்து மிக வேதனையுடன் அவதிப்பட்டார். ருக்மணி பதறி போய், மருந்து களை அளித்தாள், இருந்தும் வலி குறையவில்லை., கிருஷ்ணரின் வேதனையும் தீரவில்லை.
... அப்போது அங்கு வந்த நாரத முனிவர், இந்த வலி தீர வேண்டுமானால் , பகவானின் உண்மையான பக்தர் யாராவது, தன் பாதங்களை கழுவி அந்த நீரை சிறுது பகவானுக்கு கொடுத்தால் , அவரின் வலி தீர்ந்து விடும் என்றார்.
உடனே கிருஷ்ணர் , ருக்மணியிடம் , உன் பாதங்களை கழுவி அந்த நீரை உடனே கொடு , என்னால் வலி பொறுக்க முடியவில்லை என்று கெஞ்சினார்.
திடுக்கிட்டு போன ருக்மணி சொன்னாள், நீங்களோ உலகை எல்லாம் காக்கும் கடவுள் , உங்களுக்கு என் பாதம் பட்ட நீரை அளித்தால், நிச்சயம் எனக்கு நரகம் தான் கிடைக்கும் ! இப்படி ஒரு பாவ செயலை செய்ய நான் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன் என்று கண்டிப்பாக கூறி விட்டாள்.
கிருஷ்ணர் , நாரதரை அழைத்து , நீங்கள் பிருந்தாவனத்துக்கு சென்று யாரிடமாவது , என் நிலைமையை எடுத்து கூறி , உடனே அவர்களின் பாதம் கழுவிய நீரை பெற்று வாருங்கள் , என்று அனுப்பி வைத்தார்.
சிறிது நேரத்திலேயே நாரதர் ஒரு கிண்ணத்தில் நீருடன் வந்தார் . கிருஷ்ணர் அந்த நீரை சிறிது பருகிய உடனேயே அவரின் , வயிற்று வலி சட்டென குணமாகி விட்டது. பழைய நிலைமைக்கு திரும்பி விட்டார்.
ருக்மணி நாரதரிடம் ஆவலாய் , யார் சுவாமி , பகவானுக்கு பாத நீரை தைரியமாக கொடுத்தது ? என்று கேட்டாள் . நாரதர் சொன்னார் , நான் போய் பிருந்தாவனம் முழுதும் சுற்றி பகவானின் நிலைமையை எடுத்து கூறி கேட்டும் யாரும் கொடுக்க தயாராக இல்லை ! அப்போது ஒரு சிறுமி வந்து தன் பாதங்கள் கழுவிய நீரை கொடுக்க ஓடி வந்தாள். அவளது தோழியர் அவளிடம் , ராதை ! நீ பெரும் பாவத்தை செய்ய போகிறாய் ! பகவானுக்கு உன் பாதம் பட்ட நீரை கொடுத்தால் நீ ஏழு ஜென்மத்திற்கும் நரகத்தில் தள்ள படுவாய் ! என்று தடுத்தனர்., ஆனால் அதற்கெல்லாம் கவலை படாத ராதை கூறினாள், " எனக்கு என்ன நடக்கும் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை ! ஆனால் என் பகவான் கிருஷ்ணர் , வலியில் அவதி படுவதை என்னால் தாங்க முடியாது " என்று கூறி , அவள் தான் கொடுத்தாள், என்றார்.

ருக்மணி பக்கம் திரும்பிய கிருஷ்ணர் ," பார்த்தாயா ருக்மணி , எனக்காக ராதை நரகத்திற்கு கூட செல்ல தயாராகி விட்டாள் ! அவள் என்னை பற்றி மட்டுமே கவலை பட்டாள் . தனக்கு என்ன நேர்ந்து விடுமோ என தன்னை பற்றி எள்ளளவும் கவலை படவில்லை " இதுவன்றோ உண்மையான அன்பு , எந்த நிபந்தனைகளும் அற்றது ! தியாக உணர்வு கொண்டது !! இதுவே தலை சிறந்த பக்தி , ராதையே தலை சிறந்த பக்தை என்றார், தலை குனிந்து ருக்மணி ஒப்பு கொண்டாள்.
டிஸ்கி : நமக்கு என்ன நடக்கும் என நினைத்து செய்யப்படும் எந்த செயலும் அன்பின் பாற்பட்டது ஆகாது ! ஆகவே எதிர் பார்ப்பில்லாத அன்பினை உலகிற்கு அளிப்போம் ! !!

No comments:

Post a Comment