சிவாச்சாரியார், தனக்குள் இறைவனை எழுந்தருளச் செய்வதே ஆத்ம சுத்தி. அதற்காக அவர் செய்யும் அனைத்துக் கிரியைகளும், அவரது உள்ளத்தளவிலே செய்யப்படுகின்றன; அதாவது, பாவனையாக செய்யப்படுகின்றன. அச்செயல்களாவன: 1. சரீரத்தில் உள்ள மலம், மாயை, கர்மா சம்பந்தமான புற அழுக்குகளை நீக்குதல் 2. பஞ்ச பூத தன்மாத்திரைகளால் ஏற்படும் அக அழுக்குகளாம் சப்தாதி குணங்களை நிக்குதல் 3. வலக்கால் பெரு விரலிலிருந்து உண்டாகும் காலாக்னியால் கர்ம சரீரத்தைப் பொசுக்குதல் 4. ப்ரம்மாந்திரத்தில் உள்ள அமிர்தத்தால் உள்ளும் புறமும் நனைத்துக் கொள்ளுதல் 5. நித்யத்வ, வியாபகத்வ, சுத்த தத்வ, யுக்த, பரமாகாஸாபிபூத்த, சுத்த சைதன்ய திவ்ய சரீரமாகத் தன் உடலை பாவித்துக் கொள்ளுதல் 6. ஹ்ருதய கமலத்தில் ஈச்வரனை மனோபாவனையால் பூஜித்தல் 7. நாபியில் உள்ள அக்னியில் ஹோமம் செய்து, ஹ்ருதய கமலத்தில் உள்ள இறைவனிடத்தில் சமர்ப்பணம் செய்து, உள்பூஜையை நிறைவு செய்வதாகப் பாவித்தல் 8. பிந்து ஸ்தானத்தில் ஈச்வரனை த்யானம் செய்து, புற பூஜையின் பொருட்டு ப்ரார்த்தனை செய்து, அதனைத் தொடங்க உத்தரவு கேட்டுப் பெற்றுக் கொள்ளுதல்...
No comments:
Post a Comment