Wednesday, July 17, 2013

வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள்


  வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள்

 

 

   அகங்காரம் - செருக்கு

  • அக்கிரமம் - முறைகேடு
  • அசலம் - உறுப்பு
  • அசூயை - பொறாமை
  • அதிபர் - தலைவர்
  • அதிருப்தி - மனக்குறை
  • அதிருஷ்டம்- ஆகூழ், தற்போது
  • அத்தியாவசியம் --இன்றியமையாதது
  • அநாவசியம் -வேண்டாதது
  • அநேகம் - பல
  • அந்தரங்கம்- மறைபொருள்
  • அபகரி -பறி, கைப்பற்று
  • அபாயம் -இடர்
  • அபிப்ராயம் -கருத்து
  • அபிஷேகம் -திருமுழுக்கு
  • அபூர்வம் -புதுமை
  • அமிசம் -கூறுபாடு
  • அயோக்கியன் -நேர்மையற்றவன்
  • அர்த்தநாரி -உமைபாகன்
  • அர்த்த புஷ்டியுள்ள -பொருள் செறிந்த
  • அர்த்தம் -பொருள்
  • அர்த்த ஜாமம் - நள்ளிரவு
  • அர்ப்பணம் -படையல்
  • அலங்காரம் -ஒப்பனை
  • அலட்சியம் - புறக்கணிப்பு
  • அவசரமாக - உடனடியாக, விரைவாக
  • அவஸ்தை - நிலை, தொல்லை
  • அற்பமான - கீழான, சிறிய
  • அற்புதம் - புதுமை
  • அனுபவம் - பட்டறிவு
  • அனுமதி - இசைவு

  • ஆச்சரியம் - வியப்பு
  • ஆக்ஞை - ஆணை, கட்டளை
  • ஆட்சேபணை - தடை, மறுப்பு
  • ஆதி - முதல்
  • ஆபத்து - இடர்
  • ஆமோதித்தல் - வழிமொழிதல்
  • ஆயுதம் - கருவி
  • ஆரம்பம் -தொடக்கம்
  • ஆராதனை -வழிபாடு
  • ஆரோக்கியம் - உடல்நலம்
  • ஆலோசனை - அறிவுரை
  • ஆனந்தம் - மகிழ்ச்சி

  • இஷ்டம் - விருப்பம்
  • இங்கிதம் - இனிமை

  • ஈன ஜன்மம் - இழிந்த பிறப்பு
  • ஈனஸ்வரம் - மெலிந்த ஓசை

  • உக்கிரமான - கடுமையான
  • உபசாரம் - முகமன் கூறல்
  • உபயோகம் - பயன்
  • உதாசீனம் - பொருட்படுத்தாமை
  • உத்தரவாதம் - பிணை, பொறுப்பு
  • உத்தரவு - கட்டளை
  • உல்லாசம் - களிப்பு
  • உற்சாகம் - ஊக்கம்

  • ஐதீகம் - சடங்கு, நம்பிக்கை

  • கர்ப்பக்கிருகம் - கருவறை
  • கர்மம் - செயல்
  • கலாச்சாரம் - பண்பாடு
  • கலாரசனை - கலைச்சுவை
  • கல்யாணம் - மணவினை, திருமணம்
  • கஷ்டம் - தொல்லை, துன்பம்
  • கீதம் - பாட்டு, இசை
  • கீர்த்தி - புகழ்
  • கீர்த்தனை- பாமாலை, பாடல்
  • கோஷம் - ஒலி

  • சகலம் - எல்லாம், அனைத்தும்
  • சகஜம் - வழக்கம்
  • சகி - தோழி
  • சகோதரி - உடன் பிறந்தவள்
  • சங்கடம் - இக்கட்டு, தொல்லை
  • சங்கதி - செய்தி
  • சங்கோஜம் - கூச்சம்
  • சதம் - நூறு
  • சதா - எப்பொழுதும்
  • சதி- சூழ்ச்சி
  • சத்தம் - ஓசை, ஒலி
  • சந்தானம் - மகப்பேறு
  • சந்தேகம் - ஐயம்
  • சந்தோஷம் - மகிழ்ச்சி
  • சபதம் - சூளுரை
  • சம்சாரம் - குடும்பம், மனைவி
  • சம்பந்தம் - தொடர்பு
  • சம்பவம் - நிகழ்ச்சி
  • சம்பாதி - ஈட்டு, பொருளீட்டு
  • சம்பிரதாயம் - மரபு
  • சம்மதி - ஒப்புக்கொள்
  • சரணாகதி - அடைக்கலம்
  • சரித்திரம் - வரலாறு
  • சரீரம் - உடல்
  • சருமம் -தோல்
  • சர்வம் - எல்லாம்
  • சாதாரணம் - எளிமை, பொதுமை
  • சாதித்தல் - நிறைவேற்றுதல், விடாது பற்றுதல்
  • சாதம் - சோறு
  • சாந்தம் - அமைதி
  • சாகசம் - துணிவு, பாசாங்கு
  • சாராமிசம் - பொருட்சுருக்கம்
  • சாயந்திரம் - மாலை வேளை, அந்திப் பொழுது
  • சாவகாசம் - விரைவின்மை
  • சாஸ்திரம் - நூல்
  • சாசுவதம் - நிலை
  • சிகிச்சை - மருத்துவம்
  • சித்தாந்தம் - கொள்கை, முடிவு
  • சித்திரம் - ஓவியம்
  • சிநேகிதம் - நட்பு
  • சிம்மாசனம் - அரியணை
  • சிரத்தை - அக்கறை, கருத்துடைமை
  • சிரமம் - தொல்லை
  • சின்னம் - அடையாளம்
  • சீக்கிரமாக - விரைவாக
  • சுதந்திரம் - தன்னுரிமை, விடுதலை
  • சுத்தமான - தூய்மையான
  • சுபாவம் - இயல்பு
  • சுலபம் - எளிது
  • சுவாரஸ்யமான - சுவையான
  • சேவை - பணி
  • சேனாதிபதி - படைத்தலைவன்
  • சௌகர்யம் - வசதி, நுகர்நலம்
  • சௌக்கியம் - நலம்

  • தசம் - பத்து
  • தத்துவம் - உண்மை
  • தம்பதியர் - கணவன் மனைவி, இணையர்
  • தரிசனம் - காட்சி
  • தர்க்கம் - வழக்கு
  • தர்க்க வாதம் - வழக்காடல்
  • தாபம் - வேட்கை
  • திகில் - அதிர்ச்சி
  • திருப்தி - நிறைவு
  • தினசரி - நாள்தோறும்
  • தினம் - நாள்
  • தீர்க்கதரிசி _ ஆவதறிவார்
  • துரதிருஷ்டம் - பேறின்மை
  • துரிதம் - விரைவு
  • துரோகம் - வஞ்சனை
  • துவம்சம் - அழித்தொழித்தல், அழித்துத் தொலைத்தல்
  • தேகம் - உடல்
  • தேசம் - நாடு
  • தைரியம் - துணிவு

  • நட்சத்திரம் - விண்மீன், நாள்மீன்
  • நமஸ்காரம் - வணக்கம்
  • நர்த்தனம் - ஆடல், நடனம்,கூத்து
  • நவீனம் - புதுமை
  • நவீன பாணி - புது முறை
  • நாசம் - அழிவு, வீண்
  • நாசூக்கு - நயம்
  • நாயகன் - தலைவன்
  • நாயகி - தலைவி
  • நிஜம் - உண்மை, உள்ளது
  • நிசபதமான - ஒலியற்ற, அமைதியான
  • நிச்சயம் - உறுதி
  • நிச்சயதார்த்தம் - மண உறுதி
  • நிதானம் - பதறாமை
  • நித்திய பூஜை - நாள் வழிபாடு
  • நிரூபி - மெய்ப்பி, நிறுவு
  • நிருவாகம் - மேலாண்மை
  • நிதி - பொருள்,செல்வம், பணம்
  • நீதி - அறம், நெறி, அறநெறி, நடுவுநிலை, நேர், நேர்நிறை, நேர்பாடு, முறை

  • பகிரங்கம் - வெளிப்படை
  • பஞ்சாட்சரன்- ஐந்தெழுத்து
  • பரவசம் - மெய்மறத்தல்
  • பராக்கிரமம் - வீரம்
  • பராமரி - காப்பாற்று , பேணு
  • பரிகாசம் - இகழ்ச்சிச் சிரிப்பு
  • பரிசோதனை - ஆய்வு
  • பரிட்சை - தேர்வு
  • பலவந்தமாக - வற்புறுத்தி
  • பலவீனம் - மெலிவு, வலிமையின்மை
  • பலாத்காரம் - வன்முறை
  • பாணம் - அம்பு
  • பாதம் - அடி
  • பாரம் - சுமை
  • பால்யம் - இளமை
  • பிம்பம் - நிழலுரு
  • பிரகாசம் - ஒளி, பேரொளி
  • பிரகாரம் - சுற்று
  • (அதன்)பிரகாரம் - (அதன்)படி
  • பிரசங்கம் - சொற்பொழிவு
  • பிரசுரம் - வெளியீடு
  • பிரச்சினை - சிக்கல்
  • பிரதிநிதி - சார்பாளர்
  • பிரதிபலித்தல் - எதிரியக்கம்
  • பிரதிபிம்பன் - எதிருரு
  • பிரத்தியோகம் - தனி
  • பிரபலம் - புகழ்
  • பிரமாதமான - பெரிய
  • பிரமிப்பு - திகைப்பு
  • பிரயோகி - கையாளு
  • பிரயோசனம் - பயன்
  • பிரவாகம் - பெருக்கு
  • பிரவேசம் - நுழைவு, புகுதல், வருதல்
  • பிரார்த்தனை - தொழுகை,
  • பிரியம் - விருப்பம்
  • பிரேமை - அன்பு
  • பீடிகை - முன்னுரை
  • புண்ணியம் - நல்வினை
  • புத்தி - அறிவு
  • புத்திரன் - புதல்வன்
  • புனிதமான - தூய
  • புஷ்பம் - மலர், பூ
  • புஜபலம் - தோள்வன்மை
  • பூஜை - வழிபாடு
  • பூர்த்தி - நிறைவு
  • பூஷணம் - அணிகலம்-
  • போதனை - கற்பித்தல்

 

  • மகான் - பெரியவர்
  • மகாயுத்தம் -பெரும்போர்
  • மத்தியஸ்தர் - உடன்படுத்துபவர்
  • மத்தியானம் - நண்பகல்
  • மந்திரி - அமைச்சர்
  • மனசு - உள்ளம்
  • மனிதாபிமானம் - மக்கட்பற்று
  • மானசீகம் - கற்பனை
  • மல்யுத்தம் - மற்போர்

  • யந்திரம் - பொறி
  • யூகம் - உய்த்துணர்தல்
  • யூகி - உய்த்துணர்
  • யோக்யதை - தகுதி

  • ரதம் - தேர்
  • ரத சாரதி- தேரோட்டி
  • ராணி - அரசி
  • ராத்திரி - இரவு
  • ராச்சியம் - நாடு,மாநிலம்
  • ராஜா - மன்னன்
  • ரசம் - சாறு, சுவை

  • லட்சம் - நூறாயிரம்
  • லட்சணம் - அழகு
  • லட்சியம் - குறிக்கோள்

  • வதம் - அழித்தல்
  • வதனம் - முகம்
  • வம்சம் - கால்வழி
  • வஸ்திரம் - துணி, ஆடை
  • வாஞ்சை - பற்று
  • வாயு - காற்று
  • விக்கிரகம் - வழிபாட்டுருவம்
  • விசாரம் - கவலை
  • விசாலமான - அகன்ற
  • விசித்திரம் - வேடிக்கை
  • விஷேசம் - சிறப்பு
  • விஞ்ஞானம் - அறிவியல்
  • விஷயம் - செய்தி
  • விதானம் - மேற்கட்டி
  • விநாடி - நொடி
  • வித்தியாசம் - வேறுபாடு
  • விபூதி - திருநீறு , பெருமை
  • விமோசனம் - விடுபடுதல்
  • வியாதி - நோய்
  • விரதம் - நோன்பு
  • விவாகம் - திருமணம்
  • விவாதி -வழக்காடு
  • வேகம் - விரைவு
  • வேதம் - மறை
  • வேதவிற்பனன்ர் - மறைவல்லார்
  • வேதியர் - மறையவர்

  • ஜனநாயகம் - குடியாட்சி
  • ஜனம் - மக்கள்
  • ஜனனம் - பிறப்பு
  • ஜாதகம்- பிறப்புக் குறிப்பு
  • ஜாலம் - வேடிக்கை
  • ஜூரம் - காய்ச்சல்
  • ஜோதி - ஒளி
  • ஜோடி - இணை
  • ஜோடித்தல் - அழகு செய்தல்

  • ஸந்ததி - கால்வழி
  • ஸமத்துவம் - ஒரு நிகர்
  • ஸமரசம் - வேறுபாடின்மை
  • ஸமீபம் - அண்மை
  • ஸம்ஹாரம் - அழிவு
  • ஸோபை - பொலிவு
  • ஸௌந்தர்யம் - பேரழகு
  • ஸ்தாபனம் _ நிறுவனம்
  • ஸ்தானம் - இடம்

 

No comments:

Post a Comment