மகாபலி சக்கரவர்த்தி விஷ்ணுவால் ஆட்கொள்ளப்பட்டு பாதாள லோகத்துக்கு
அனுப்பப்பட்டார். அந்த உலகின் அரசனானான் மகாபலி. ஒருமுறை தர்மரும் கிருஷ்ணரும்
பாதாள லோகம் வந்தனர்.
அவர்களுக்கு தங்கத்தட்டில் அறுசுவை உணவு படைக்கப்பட்டது. ஏவலர்கள் தாராளமாக அறுசுவை உணவை இருவருக்கும் வழங்கினர். சாப்பிட்டு முடித்ததும் தட்டைக் கழுவி அங்கேயே வைத்தனர். ஏவலர்கள் அவர்களிடம், ""ஐயா! எங்கள் நாட்டில் ஒருவருக்கு கொடுத்ததைத் திரும்பப்பெறும் வழக்கமில்லை. இவற்றை நீங்களே எடுத்துச் செல்லுங்கள்,'' என்றார்கள்.
பின், அவர்கள் மகாபலியைச் சந்தித்தனர். தர்மர் தான் செய்யும் தர்மம் பற்றி மகாபலியிடம் சொன்னார். ""மகாபலி! நான் தினமும் 500 பேருக்கு அன்னதானம் கொடுப்பது வழக்கம்,'' என்று பெருமையடித்தார்.
""அப்படியா! உங்கள் நாட்டில் அவ்வளவு ஏழைகள் இருக்கிறார்களா? இங்கே இருப்பதை சாப்பிட ஆள் தேடினாலும் கிடைக்கமாட்டேன் என்கிறது,'' என்றான் மகாபலி.
தர்மருக்கு முகத்தில் ஈயாடவில்லை.

No comments:
Post a Comment