Thursday, July 4, 2013

கிரஹப் பிரவேசம் செய்யும் தினங்கள்

இக்காலங்களில் வீடு கட்டி முடிக்கும் முன்பே வாடகைக்கு வீட்டை வீட்டிருப்பவர்களுக்கு (டார்ச்சர்) தொல்லை பொறுக்க முடியாமல் கிரஹப் பிரவேசம் செய்து குடி புகுகின்றனர். குடிவருதல் என்பது வீட்டுத் திருமணம் போன்றது. நல்ல நாள் பார்த்துதான் சுபயோக சுபலக்கனத்தில் வர வேண்டும். துதியை,

திருதியை, பஞ்சமி, சப்தமி, ஏகாதசி, திரயோதசி, திதிகளில் ரோகிணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், அனுஷம், உத்ராடம், திருவோணம், சதயம், உத்ரட்டாதி, ரேவதி நாட்களில் ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய லக்னங்களில் கிரஹப்ரவேசம் செய்யலாம்.

தவிர்க்க வேண்டிய மாதங்கள்............

ஒவ்வரு ராசிக்கும் ஆனிய மாதம் என்று ஒன்று இருக்கிறது. மனையின் யஜமானர் (உரிமையாளர்) இந்த மாதங்களில் வீடு கட்டத் தொடங்கவோ, கட்டிய வீட்டிற்குக் கிரஹப் பிரவேசமோ செய்தல் கூடாது. மேஷ ராசிக்குச் சித்திரை மாதம், ரிஷப ராசிக்கு வைகாசி மாதம்,

மிதுன ராசிக்கு ஆனிமாதம், கடக ராசிக்கு ஆடிமாதம், சிம்ம ராசிக்கு ஆவணி மாதம், கன்னிராசிக்குப் புரட்டாசி மாதம், துலாம் ராசிக்கு ஐப்பசி மாதம், விருச்சிக ராசிக்குக் கார்த்திகை மாதம், தனுசு ராசிக்கு மார்கழி மாதம், மகர ராசிக்குத் தைமாதம், கும்பராசிக்கு மாசிமாதம், மீன ராசிக்குப் பங்குனி மாதமும், சூன்ய மாதங்கள் எனப்படுகின்றன.

கடைக்கு வாஸ்து முறை.........

வியாபாரம் செய்கிற மனை சதுரம் அல்லது நீள் சதுரமாக அமைக்கலாம். கடையில் பூஜை படங்கள் கிழக்கு பார்த்து அமைக்கலாம். வடகிழக்கில் தண்ணீர் பானை வைத்துக் கொள் ளலாம். தென் மேற்குப் பகுதியில் கடை யின் எஜ மானார் அமர்ந்து வியா பாரத்தைக் கவ னிக்கலாம். ஷோகேஸ் அமைப்பை வடகிழக்கில் வைக்க வேண்டாம்.

கோவில்களில் `கல்வீடு கட்டாதீர்!.........

எல்லாக் கோவில் களிலும் அங்கு செல்லும் பக்தர்கள் அங்குள்ள செங்கல், சிறு கற்களை வைத்து வீடு போல் கட்டி வைத்து அக்கோயில் தெய்வத்தை வழிபட்டு வந்தால் சொந்த வீடு கட்டி விடலாம் என்று தவறாக சிறு வீடு பிரார்த்தனை செய்கின்றனர்.

இது தவறான செயலாகும். ஆலய பகுதிகளை சரி செய்ய கற்களை குவித்து வைத்துள்ள ஆலயத்தாருக்கு நாம் இடர் ஏற்படுத்தினால் வீடு கட்ட தடை தான் வரும். இனிமேல் வீடு கட்ட தெய்வ துதிகளை கூறி வழிபடுங்கள். வீடு அமையும்.

தலைவாசன் ரூம் அமைக்கும் முறையும் லக்னமும்..........

* மேஷம், ரிஷபம், மிதுனம் லக்கினக்காரர்களுக்கு - கிழக்கு தலைவாசல்
* சிம்மன், கன்னி, கடகம் லக்கினக்காரர்களுக்கு - தெற்கு தலைவாசல்
* துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு - மேற்கு தலைவாசல்
* மகரம், கும்பம், மீனம் லக்னக் காரர்களுக்கு - வடக்கு தலை வாசல்

வைத்தல் நல்லது. எப்போதும் வீட்டின் கிழக்கு பாகத்தில் தண்ணீர் புழக்கம் இருந்து கொண்டிருக்க வேண்டுëம். வீட்டின் தெற்கு கோடியும் மேற்கு கோடியும் உயர்ந்திருக்க வேண்டும். வீட்டின் வடக்கு பக்கம் உள்ள அறையில் இரும்புப் பெட்டி இருக்க வேண்டும்.

வீட்டின் வடகிழக்கு மூலை சுத்தமாக இருக்க வேண்டும். இந்த மூலையில் கழிவறை செப்டிங் டாங்க் அமைத்தல் ஆகாது. தலைவாசலில் இருந்து நடுக்கூடம் வரை உள்ளே செல்லும் இடம் சுருங்கக் குவிந்து சொல்லக்கூடாது. விரிந்து செல்லலாம். சற்று கூடுலாக இருக்கலாம்.

1 comment:

  1. ஆடி மாதம் வீடு கட்டாலாமா

    ReplyDelete