Thursday, August 22, 2013

நிறைய தோப்புக்கரணம் போடுங்க!

+
கோயில் வழிபாட்டில் முதல்வணக்கம் விநாயகருக்கு தான். அவர் முன் தோப்புக்கரணம் போட்டு வழிபாட்டைத் தொடங்குகிறோம். இதற்கு தோர்பி கரணம் என்று பெயர். கைகளால் காதுகளைப் பிடித்துக் கொள்வது என்று இதன் பொருள். கைகளால் காதுகளைப் பிடித்தபடி மூன்று முறை குனிந்து நிமிர்ந்துவிட்டு, தலையில் குட்டிக் கொள்வது இந்த வழிபாடு. இதற்கு அறிவியல் ரீதியான காரணம் உண்டு.  மறந்து போன ஒரு விஷயத்தை நினைவுபடுத்த, தலையில் கை வைத்து தட்டியபடியே நினைவுக்கு கொண்டு வர முயற்சிப்போம். அப்போது நரம்புகள் தூண்டப்பட்டு மறந்த விஷயம் நினைவுக்கு வரக்கூடும்.  அதுபோல காதை பிடிக்கும்போதும், நரம்பு மண்டலம் தூண்டப்படும். மூளை விழிப்படைந்து நினைவாற்றல் பெருகும். ரத்த ஓட்டம் துரிதமாகும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும். தோப்புக்கரணம் அக்குபஞ்சர், அக்குபிரஷர் வைத்தியம் போல, புத்துணர்ச்சிக்கு வழிவகுக்கிறது.  குழந்தை பிறந்ததும் தலைமுடி எடுத்து, காதுகுத்தும் சடங்கும் இந்த நோக்கத்தில் தான் நடத்தப்படுகிறது. காது குத்தும் போது குழந்தையின் நாடிநரம்பு தூண்டப்பட்டு அறிவு, கிரகிப்புத்திறன் அதிகரிக்கிறது.  அந்தக் காலத்தில், மறதிக்கு உள்ளாகும் மாணவர்களை ஆசிரியர் காதைத் திருகி தண்டனை வழங்கியதும் இதற்காகவே.

No comments:

Post a Comment