பூஜையின்போது, இறைவனுக்கு படையல் போடுவதை நைவேத்யம், நிவேதனம் என்று சொல்வர். நிவேதனம் என்ற சொல்லுக்கு அறிவித்தல் என்று பொருள். அந்த அறிவிப்பை நமக்கு வெளிப்படுத்துவதே கோயில் மணி. அபிராமி பட்டர் அம்பிகையை, மணியே மணியின் ஒலியே என்று அந்தாதியில் அழைக்கிறார். சுவாமிக்கு 16 வகை தீபாராதனைகளைச் செய்யும் சோடஷ உபசாரத்தின் போது, கண்டநாதம் என்னும் பெரிய காண்டாமணியை ஒலிப்பது வழக்கம். சிவனுக்குரிய பூஜை மணியில் நந்தியும், பெருமாளுக்குரிய மணியில் சங்கு, சக்கரம், கருடன் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும். உள்ளத்தில் தூய்மையான உணர்வு எழுவதற்கும், தீய உணர்வுகள் வெளியேறவும் மணியை ஒலிக்கிறேன் என்பதே அப்போது சொல்லும் ஸ்லோகத்தின் பொருள். மணி தொடர்ந்து ஒலிக்கும் இடத்தில் தீயசக்திகள் நீங்குவதோடு, அந்த இடம் முழுவதும் நல்ல சக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம்
No comments:
Post a Comment