சங்க இலக்கியத்தில் பரிபாடல் என்ற இலக்கியம் உண்டு. அதில் முருகனைப் பற்றிய பாடலுக்கு செவ்வேள் என்று பெயர். அதைப் பாடிய புலவர் கடுவன் இளவெயினனார். முருகனிடம், ஐயா! உன்னிடம் பொன், பொருள், சுகபோகம் இவற்றை யாசிக்கவில்லை. உன் மீது நீங்காத அன்பு, அருள், அறம் ஆகியவற்றை வேண்டுகிறேன், என்று கேட்கிறார். முருகன் தண்டாயுதபாணியாக கோவணத்துடன் நிற்பது போல, ஆசையில்லா பெருவாழ்வை வேண்டுகிறார். இப்படியும் பக்தர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
No comments:
Post a Comment