Thursday, August 22, 2013

சந்தியாவந்தனம் செய்வதன் சிறப்பு என்ன?

இரு பொழுதுகள் சந்திக்கும் காலத்தை  சந்தியாகாலம் என்பர். இரவும், காலைப்  பொழுதும் சேரும் விடியற்காலைப் பொழுதைக் காலை சந்தி என்றும், காலையும் மதியமும் சந்திக்கும் வேளையை மதிய சந்தி என்றும், மாலையும், இரவும் சந்திக்கும் வேளையை சாயம் சந்தி  என்றும் மூன்று சந்தியாகாலங்கள் உள்ளன. இந்த வேளைகளில் தேவர்களுக்கு வந்தனம் செய்யப்படுவதற்கு சந்தியாவந்தனம் என்று பெயர். இதில் காயத்ரீ என்னும் தேவதையை ஜபம் செய்து வழிபடுவது சிறப்பு. மங்கலாக எரியும் விளக்கின் திரியைத் தூண்டிவிட்டால் பிரகாசமாக எரியும், அதுபோல, தேவையில்லாத விஷயங்களில் நம் அறிவு மயங்கி நிற்கும்போது, அதாவது அறிவாற்றல் மங்கும்போது, அந்த காயத்ரீதேவி அறிவைத் தூண்டி அதன் ஆற்றலைப் பெருக்கி வாழ்வில் வெற்றியைத் தர வேண்டும் என வேண்டிக் கொள்வதே மந்திரத்தின் பொருள். தினமும் மூன்றுவேளை சந்தியாவந்தனம் காயத்ரீஜபம் செய்தால், சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லாருக்குமே வெற்றிதான்.

No comments:

Post a Comment