ராவணனின் மகன் இந்திரஜித் பிறக்கும் போதே வானில் மேகம் கூடி இடி முழங்குவது போல
கர்ஜித்தான். அதனால் அவனுக்கு "மேகநாதன்' என்று பெயர் சூட்டப்பட்டது. இந்திரஜித்
சிவனை நோக்கி தவம் செய்து, போர் செய்யத் தேரும், மறைந்து நின்று தாக்கும் வலிமையும்
பெற்றான். எனவே இவனை "மாயாவி' என்பர். இந்திரனை மாயையால் கட்டி, அவனுடைய
பிரம்மாஸ்திரத்தை பறித்துக் கொண்டதால், "இந்திரனை வென்றவன்' என்னும் பொருளில்
"இந்திரஜித்' என்ற பெயர் ஏற்பட்டது. அனுமன் சீதையைத் தேடி இலங்கை வந்தபோது,
பிரம்மாஸ்திரத்தால் அவரைக் கட்டி ராவணன் முன் நிறுத்திய ஜகஜால கில்லாடி இவன்.
லட்சுமணனுடன் போரிட்ட போது இந்திரஜித் உயிர் விட்டான். இவனுடைய உடலை ராவணன்
எரிக்கவில்லை. அந்த வீர மகன் மீது கொண்ட பாசத்தால் தைலத்தில் இட்டுப் பாதுகாத்தான்.
No comments:
Post a Comment