Monday, September 23, 2013

பித்ருக்களின் கடமை



பித்ருக்களின் கடமை

சூரியனும் சந்திரனும் சேரும் தினமான அமாவாசை தினம் தான் பித்ருக்களுக்கு மிகவும் உகந்த நாள். அமாவாசை தோறும் பித்ருக்களை மறக்காமல் வழிபட்டால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். பித்ருக்கள் வாழும் இடம் பித்ருலோகம் என்றழைக்கப்படுகிறது.

அந்த உலகம் சூரியனுக்கும் அப்பால் பல லட்சம் யோசனை மைல் தொலைவில் இருப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. பித்ருலோகத்தில் இருப்பவர்களுக்கு பசி, தூக்கம் என்று எதுவும் கிடையாது. தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்ப பசி ஏற்படலாம் என்று சிலர் சொல்கிறார்கள். அவர்களுக்கு என்று எந்த வேலையும் இல்லை.

ஆனால் அவர்களுக்கு என்று கடமைகள் உள்ளன. அந்த கடமைகளை அவர்களுக்கு வரையறுத்துக் கொடுப்பது ஒளி நிலையில் இருக்கும் மகா விஷ்ணு ஆவார். பொதுவாகவே ஆண்டவன் அனைத்து பித்ருக்களுக்கும் ஒரு கடமையை கொடுத்துள்ளார்கள்.

அந்த கடமையை நிறைவேற்ற பித்ருக்கள் அனைவரும் பாடுபடுகிறார்கள். பித்ருக்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள வாழும் இளைய தலைமுறைகளையும் வருங்கால தலைமுறையினரையும் தெய்வீக நெறியில் மேன்மைப்படுத்த வேண்டும் என்ற கடமை உணர்வுடன் இயங்குகின்றனர்

No comments:

Post a Comment