முருகனுக்கும் சூரபத்மனுக்கும் போர் நிகழ்ந்த சமயத்தில், சேனைத்தலைவரான வீரபாகு,
அசுரனான பானுகோபனுடன் போரிட்டுக் கொண்டிருந்தார். மாயாவியான பானுகோபனை தன்னுடைய
ஞானாஸ்திரத்தால் வீரபாகு முறியடித்தார். "பானுகோபனை வெற்றி பெறாமல் முருகனை
சந்திப்பதில்லை' என்று அவர் சபதம் செய்திருந்தார். வெற்றியை அறிந்த பூதகணங்கள்
சங்கு முழங்கி ஆரவாரித்தனர். பானுகோபனை வென்றால், வெற்றிப்பரிசாக வரம் ஒன்று
தருவதாக முருகப்பெருமான் வீரபாகுவிடம் தெரிவித்திருந்தார். ஆசையில்லாத வீரபாகுவோ,
""முருகா! நிலையில்லாத செல்வம் எனக்கு தேவையில்லை. உன்னிடம் மாறாத அன்பு ஒன்றே
போதும்,'' என்று வரம் கேட்டார். முருகன், வீரபாகுவை மார்போடு அணைத்து மகிழ்ந்தார்
No comments:
Post a Comment