Monday, September 2, 2013

ஆனிதிரு மஞ்சனம்'

ஆடல்வல்லானாகிய நடராஜர் இடைவிடாது நடனமாடி, படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் தொழில்களால் உலகத்தை இயக்குகிறார். அவரது வலக்கையில் இருக்கும் உடுக்கை படைத்தலையும், அபயகரம் காத்தலையும், இடக்கையிலுள்ள நெருப்பு அழித்தலையும், ஊன்றிய திருவடி மறைத்தலையும், தூக்கிய திருவடி அருளலையும் குறிக்கிறது. நடராஜருக்கு, ஆண்டுக்கு ஆறுமுறை அபிஷேகம் நடத்தி வழிபடுவர். இதில் மார்கழி திருவாதிரையும், ஆனி உத்திரமும் முக்கியமானவை. ஆனிஉத்திர அபிஷேகத்தை "ஆனிதிரு மஞ்சனம்' என்பர். திருமஞ்சனம் என்றால் "புனிதநீராடல்'.

No comments:

Post a Comment