Sunday, September 1, 2013

ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த ஆண்டு

இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றாக கிருஷ்ண ஜெயந்தி இருக்கிறது. ஆங்கில ஆண்டுக்கணக்கின்படி கூறுவதானால், கிருஸ்து பிறப்பதற்கு 3227 வருடங்களுக்கு முன்னால் (அதாவது 1945-ல் இருந்து 5172 ஆண்டுகளுக்கு முன்பாக) விஸ்வவசு வருடம் பாத்ரபத கிருஷ்ணபட்சத்தில்,

ச்ராவண மாதத்தின் இரண்டாம் பட்சத்தின் எட்டாம் நாளான புதன்கிழமை அன்று ரோகினி நட்சத்திரத்தில், ரிஷப ராசியில் சந்திரன் புகுந்தபோது பகவான் அவதரித்தார். அவரது உள்ளங்கையில் தாமரையும் சக்கரமும் இருந்தன. கொடி, தாமரை, இடி, தார்க்குச்சி, பார்லிவிதை, ஸ்வஸ்திகா போன்றவை அவரது வலது பாதத்தில் காணப்பட்டன.

அவரது இடது பாதத்தில் வானவில், முக்கோணம், நீர்க்குடம், பிறை, வானம், மீன், பசுவின் பாதம் போன்றவை காணப்பட்டன. கோகுலத்தில் நந்தகோபன், கிருஷ்ணனின் பிறப்பை பெரிய விழாவாக நடத்தினார். ஜோதிடர்களை அழைத்துவந்து சடங்குகளைச் செய்வித்தார்.

ஜோதிடர்கள் கிருஷ்ணனின் ஜாதகத்தைக் கணித்தார்கள். வேத மந்திரங்களை உச்சரித்தனர். கண்ணனைத் தொட்டிலில் இட்டு, சகல அணிகலன்களையும் பூட்டி, தாலாட்டி, சீராட்டி, பாராட்டி கிருஷ்ணன் என்று பெயர் சூட்டினார்கள்.

No comments:

Post a Comment