Saturday, September 7, 2013

ஆட்சியாளர்கள் மக்களை எப்படிக் கவனிக்க வேண்டும்?

ஆட்சியாளர்கள் மக்களை எப்படிக் கவனிக்க வேண்டும்?

அரசனுக்கும் மக்களுக்குமான உறவு எப்படி இருக்க வேண்டும் என்று மகாபாரதம் ஓர் உதாரணம் சொல்கிறது. கர்ப்ப ஸ்த்ரீ போல ...என்று!

'ஒரு தாய் தன் வயிற்றிலே இருக்கும் குழந்தையின் நலனுக்காக எப்படிக் கவலைப்படுவாளோ, அதனுடைய வளர்ச்சிதான் தன்னுடைய வாழ்வு என்று எப்படிக் கருதுவாளோ, தனக்கெனத் தனியாக ஒருவாழ்வை வகுத்துக்கொள்ளாமல் தன்னுடைய குழந்தையுடைய வாழ்விலே தன்னுடைய வாழ்வை எப்படி ஐக்கியப்படுத்திக்கொள்வாளோ, அப்படி ஓர் அரசன் தன்னுடைய நாட்டு மக்களது நலனைப் பேண வேண்டும். அவர்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். வயிற்றிலே வளரும் குழந்தைக்காக, தாய் துன்பப்படுகிறாள், அப்படி மக்களுக்காகத் துன்பப்பட வேண்டும். வயிற்றிலே உள்ள குழந்தை தனக்கு வேண்டியதைச் சாப்பிட்டுக்கொள்ளும் என்று எந்தத் தாயாவது நினைப்பாளா? இல்லை, அதற்குத் தேவையானதை இவள் சாப்பிடுவாள். இப்படித்தான் அரசர்களும் இருக்க வேண்டும்’ - என்கிறது மகாபாரதம்.

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு, தான் கர்ப்பத்தில் இருப்பதே தெரியாது. அதுபோல, நாட்டு மக்களுக்கும் நாம் ஆளப்படுகிறோம் என்பதே தெரியக் கூடாது என்றும் மகாபாரதம் சொல்கிறது. ஆனால், இன்றைய நிலைமை அப்படியா இருக்கிறது?

No comments:

Post a Comment