நமக்கு உதவி செய்தவர்களை என்றுமே மறக்கக் கூடாது என்பதற்கு கண்ணன் கற்றுத்தரும் ஒரு நிகழ்ச்சி. யமுனைக்கரையில் உள்ள ஆயர்பாடியில் கண்ணன், குழந்தையாக இருந்தபோது வெண்ணெய் திருடி உண்பான். ஒருமுறை வெண்ணெய் திருடியபோது அவனை யசோதை பார்த்து விட்டாள்.
கையும் களவுமாக சிக்கியதால், அவளிடம் அடிவாங்கப் பயந்து தப்பி ஓடினான். ததிபாண்டன் என்ற நண்பனின் வீட்டுக்குள் சென்று விஷயத்தைச் சொன்னான். ததிபாண்டன் ஒரு தாழியை அவன் மீது கவிழ்த்து வைத்துவிட்டான்.
கண்ணனை தேடிய யசோதை அங்கு வந்தாள். ததிபாண்டனிடம் விசாரித்தபோது, `கண்ணன் இங்கு வரவில்லையே' என்று சொல்லி விட்டான். யசோதை சென்ற பிறகு. கண்ணன் தன்னை மூடிவைத்திருந்த தாழியை எடுக்கச் சொன்னான்.
ஆனால், ததிபாண்டன் மறுத்துவிட்டான். அவன் கண்ணனிடம், "கண்ணா! நீ தெய்வம் என்பதை நான் அறிவேன்'' எனக்கு நீ பிறப்பற்ற நிலையைத் தந்தால்தான் உன்னை விடுவேன் என்றான். கண்ணனும், சரி! நீ கேட்டதைத் தந்து விட்டேன்.
என்னை விடு! என்றான். ததிபாண்டன் அப்போதும் விடவில்லை. "கண்ணா! நான் மோட்சம் பெறகாரணமாக இருந்த இந்த தாழிக்கும் விமோசனம் கொடு!'' என்றான். கண்ணன், தாழிக்கும் விமோசனம் கொடுத்தான்

No comments:
Post a Comment