Saturday, October 26, 2013

விவேகசிந்தாமணி 16

விவேகசிந்தாமணி 16

கர்ப்பத்தால் மங்கையர்க் கழகு குன்றும் கேள்வியிலா அரசனெனில் ஆட்சி குன்றும்
துர்ப்புத்தி மந்திரியால் அரசுக் கீனம் துடிப்பில்லாப் பிள்ளைகளால் குலத்துக் கீனம்
நற்புத்தி கற்பித்தால் அற்பர் கேளார் நன்மைசெயத் தீமையினை நயந்து செய்வார்...
அற்பரோ டிணங்கிவிடின் பெருமை தாழும் அரியதவம் கோபத்தா லழிந்து போகும்.

##
கர்ப்பம் தரிப்பதால் மங்கையருக்கு கட்டழகு குறைந்துபோகும். கல்வியறிவு இல்லாத மன்னவனால் நாடு கெட்டழியும் (
தீய சிந்தனை உடைய அமைச்சனால் அரசனுக்கு மதிப்பு குறையும்.

சொற்ப்புத்தி (பெரியவர்கள் சொல்லவதை கேட்டு நடத்தல்) இல்லாத மைந்தர்களால் குலத்தின் பெருமை குன்றும்.

நல்ல புத்திமதிகளை சொன்னாலும் கீழோர் காதுகொடுத்து கேட்க மாட்டார்கள்.

நன்மை செய்தவனுக்கு உடனே தீமை செய்யவே நினைப்பார்கள். இப்படிப்பட்ட சிரியவர்களோடு சேர்ந்தால் பெரியவர்களின் பெருமை குறையும்.

முயன்று பலகாலம் மேற்கொண்ட தவமானது சிறு கோவத்தினால் வீணாகும்.

No comments:

Post a Comment