Tuesday, October 1, 2013

மறு ஜென்மம் உண்மையா?

மறு ஜென்மம் உண்மையா?
--------------------------------------
இந்து சமயத்தின் நம்பிக்கைகளில் முக்கியமானவை மறுஜென்மம் உண்டு என்பதாகும்.நமது கடவுளான மகாவிஷ்ணுவே பத்து அவதாரங்கள் எடுத்தவர்.சொர்க்கம்,நரகம் என்பது சமய நம்பிக்கை சார்ந்த விசயமாக உள்ளது.

நாம் ஒருவருக்கு உதவி செய்கிறோம் ஆனால் அவர் நமக்கு கெடுதலே செய்கிறார்.அந்நிய நபரோ,நண்பரோ நமக்கு எதிர்பாராத உதவிகள் பலவற்றை செய்கிறார் இதன் சூட்சும ரகசியம் என்ன?”நம் தொடர்பு கொள்ளும் ஒவ்வொரு நபர்களுக்கும்,நமக்கும் பிரபஞ்ச ரீதியான இணைப்புகள் உண்டு.அதாவது அவருடன் நான் ஏதோ ஒரு பிறவியில் சம்பந்தம் படாமல் நமக்கு அவரால் நன்மை,தீமைகள் கிடைக்காது.இதுதான் சூட்சுமத்தின் ரகசியம் ஆகும்....

ஜோதிட ரீதியாக பார்த்தால் ஒருவரின் முற்பிறவியை 5-ம் இடத்தை கொண்டு கணக்கிடலாம்.என்னிடம் ஒரு நபர் இரண்டு நாட்களுக்கு முன் ஜாதகம் பார்க்க வந்தார்.அவருடைய மகன் ஜாதகத்தை பார்த்து இவர் போன பிறவியில் உங்கள் அப்பாவாக பிறந்தவர் என்றேன்.அமைதியாக இருந்தவர் என்னிடம் சொல்லியது,எனக்கு 13 வயதிலேயே எங்கள் அப்பா இறந்துவிட்டார்.அவர் முகம் கூட ஞாபகம் இல்லை,இப்பொழுது எங்கள் அப்பாவின் போட்டோ கிடைத்தது.அதை பெரிது பண்னி பார்த்த போது அதிர்ந்துவிட்டேன் அப்படியே என் மகனை போலவே இருந்தார்.அதற்காக அவர் மீசையை வேறு மாதிரி ஆக்கி வீட்டில் வைத்து வணங்குகிறோம் என்றார்

எந்த ஒரு மனிதருக்கும்,கண்டிப்பாக முற்பிறவி ஞாபகம் வராது.இதற்கு உதாரணமாக மகாபரதத்தில்,அர்ஜுனர் தன் மகன் அபிமன்யூவை போரில் பறிகொடுத்து சோகத்துடன் இருக்கிறார்.இதை கவனித்த கிருஷ்ணர் பிறவி பயனின் சூட்சுமத்தை உணர்த்த,அர்ஜுனரை சொர்க்கத்துக்கு அழைத்துசெல்கிறார்.அங்கே அபிமன்யூ உல்லாசமாக ஊஞ்சலில் ஆடிகொண்டியிருக்கிறார்.இதை பார்த்த அர்ஜுனர் மகன் அருகி ஆவலோடு செல்கிறார் ஆனால் அபிமன்யூக்கு அர்ஜுனரை அடையாளம் தெரியவில்லை.

இந்த உலகத்தில் கடவுளால் படைக்கப்படும் உயிர்கள் தலைவருக்கு குழந்தையாகிறது,பணக்காரணுக்கு குழந்தையாகிறது ஏன் பிச்சைக்காரனுக்குகூட குழந்தையாகிறது.கடவுளின் படைப்பில் ஏன் இத்தனை வேறுபாடுகள்?நாம் முற்பிறவியில் செய்யும் புண்ணியங்களை பொறுத்தே இந்த பிறவி அமைகிறது இதைத்தான் கர்ம வினை என்கிறோம்.நாம் முற்பிறவியை பற்றி கவலைபடாமல் இந்த பிறவியில் நல்ல செயல்கள்,தர்மங்கள்,புண்ணிய காரியங்கள் செய்தால் இவை அனைத்தும் நாம் எத்தனை பிறவி எடுத்தாலும் கூடவே வரும் என்பது உண்மையாகும்

No comments:

Post a Comment