Monday, October 14, 2013

கவியரசு கண்ணதாசன் அவர்களின் அர்த்தமுள்ள ஹிந்து மதம் புத்தகத்தில் இருந்து

 கவியரசு கண்ணதாசன் அவர்களின் அர்த்தமுள்ள ஹிந்து மதம் புத்தகத்தில் இருந்து......


எனக்குத் தெரிந்தவரை, நாத்திகம் பேசிய உண்மையானவர்களில் பலர் சொத்தை இழந்தவர்கள். சில உத்தமத் தொண்டர்கள், பெண்டாட்டியை இழந்தார்கள்.
அக்கிரமக்காரர்கள் மட்டுமேதான் அனுபவித்தார்கள்....

பூஜை அறைக்கும், குளிக்கும் அறைக்கும் பேதம் தெரிந்தவன், ஆத்திகன்.

மல ஜலம் கழிக்கும் இடத்திலேயே சாப்பிட்டுப் பழகியவன் நாத்திகன்.
.
தர்மம் தர்மம் என்று பயப்படுகிறவன், ஆத்திகன்.

அனுபவிப்பதே தர்மம் என்று நினைப்பவன், நாத்திகன்.

ஆத்திகன் மனிதனாக வாழ்ந்து தெய்வமாகச் சாகிறான்.

நாத்திகன், மனிதன் போலக் காட்சியளித்து, மிருகமாகச் சாகிறான்.

உண்மையிலேயே ஒருவன் நாத்திகம் பேசினால் அவன் உணர்ச்சியற்ற ஜடம்; ஆராயும் அறிவற்ற முடம்.

பகுத்தறிவு ஒழுங்காக வேலை செய்யுமானால், அது கடைசியாக இறைவனைக் கண்டுபிடிக்குமே தவிரச் சூனியத்தைச் சரணடையாது. ..

No comments:

Post a Comment