இறை வழிபாடு, பக்தி, பூஜைகள், பஜனை. சத்சங்கம் இதெல்லாம் எதற்காக ? தவத்தை செய்து இறையாற்றலை நேரடியாக அடைந்து விட வேண்டியது தானே ? என்றால், அதற்குக் காரணம் இருக்கி...றது. பக்குவப்படாத, அன்பு இல்லாத பேதமுள்ள மனம் ஒரு போதும் பேராற்றலை உணர முடியாது. அந்த எல்லாம் வல்ல சக்தியானது ஈர்க்கும் சக்தியை உடையது. அது தன்னடுடைய பிணைப்பாற்றலின் சக்தியைக் கொண்டு எல்லாவற்றையும் ஈர்த்து, இயக்கி வருகிறது. நம் உடலில் அந்த பிணைப்பாற்றல் என்கிற சக்தியின் வெளிப்பாடே அன்பு என்கிற உணர்வாகும். பயமே பக்தி என்பார்கள். அது தவறு. பயம் எப்போதும் இருப்பதில்லை. பயம் தெளியும் போது பக்தி ஓடி விடும். ஆனால் அன்புடைய உள்ளத் தோடு கூடிய பக்தி எப்போதும் நிலைத்திருக்கும். ஏனென்றால் அன்பு ஒன்றே பேராற்றலின் யதார்த்த நிலை. எனவே அன்போடு கூடி பக்தி செலுத்தி இறைவனை வழிபாடு செய்பவர்கள் மனதில் ஈகை, இரக்கம் போன்ற நல்ல குணங்கள் வளரும். தீய குணங்கள் படிப்படியாக விலகிவிடும். அன்பு பெருக்கெடுத்து ஓடும் உள்ளத்தை உடையவன் எல்லா உயிர்களையும் தன் உயிர் போல் நேசிப்பான். எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண்பான். இறைவன் படைத்துள்ள உயிர்களை நேசிக்காதவன், அவற்றின் மேல் இரக்கம் இல்லாதவன், அவற்றின் துன்பங்களைக் கண்டு மனம் வருந்தி அவற்றிற்கு உதவாதவன் இறைவனையே ஏமாற்றி விடலாம் என்று நினைக்கும் ஒரு கபட நாடக வேசதாரியே ஆவான். இத்தகையவர்கள் செய்யும் பூஜைகள் சுயநலத்தின் பொருட்டேயாகும். எத்தகைய வழிபாடாக இருந்தாலும் சரி, இரக்க உணர்வையும், ஈகை உணர்வையும் தூண்டாமல் போனால் அது போலி பூஜையே ஆகும். புரட்டு வழிபாடாகும். இறைவனை வழிபடும் போது உள்ளத்தில் அன்பு பெருக்கெடுத்தல் வேண்டுமே அல்லாது அச்சம் எழக் கூடாது. விநயம் இருக்க வேண்டுமே அல்லாது, வியாபார நோக்கம் இருக்கக் கூடாது. சிலர் சொல்கிறார்கள் இறைவன் எல்லாம் வல்லவன். அவனை அணுகும் போது பயம் வேண்டும் என்கிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்கும் மனிதர்களும் ஆலயங்களுக்குச் சென்று ஐயா, நான் எளியவன், பாவி, முட்டாள், அறிவில்லாதவன், ஆற்றலில்லாதவன் என்னைக் காப்பாற்றுங்கள் என்று பயத்தோடு வேண்டுகிறார்கள். தனக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பையே ஆறியாத இவர்கள் மற்ற உயிர்களுக்கும் தனக்கும் உள்ள தொடர்பை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும். ஒரு குற்றவாளி அரசனுடைய காலில் விழுந்து கதறுவது போல இறைவன் முன்னே நடுங்குகிறார்கள். அல்லது நடுங்குவது போல நடிக்கிறார்கள். இதைத்தான் நாதன் உள்ளில் இருக்கிறான் என்று உணராதவர்களிடம் நட்ட கல்லில் உள்ள இறைவன் எப்படி பேசுவான் ? என்கிறார் சித்தர். இப்படிப்பட்டவர்கள் இறைவனின் கருத்துக்கு மாறாக வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதே உண்மை. இன்னும் சில பணம் படைத்தவர்களோ அல்லது நடுத்தர வாசிகளோ இறைவனிடம் வியாபாரம் பேசுவார்கள். ஐயா நான் உனக்கு நூறு ரூபாய் செலவு செய்து அபிஷேகம் செய்கிறேன் நீ எனக்கு அதிக பணம் கிடைக்கச் செய்ய வேண்டும். உனக்கு கோவில் கட்டி கும்பாபிஜேகம் செய்து வைக்கிறேன், என் வியாபாரத்தில் எனக்கு அதிக லாபம் கிடைத்திடச் செய்ய வேண்டும். இந்த ஆண்டு வருமானம் பத்து இலட்சம் கிடைத்தால் உன் உண்டியலில் இரண்டு இலட்சம் போடுகிறேன் என்றெல்லாம் பேரம் பேசுவார்கள். இன்னும் சில பேர் இருக்கிறார்கள், எவ்வளவு கிடைத்தாலும்திருப்தி என்பதே இல்லாமல் இறைவனிடம் போய் எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு என்று பிச்சைக் காரன் கேட்பது போல கேட்டுக் கொண்டிருப்பார்கள். இல்லாதவர்கள் இருப்பவர்களை நாடி பிச்சை கேட்பது போல இவர்கள் இறைவனிடம் கேட்பார்கள். இதை எல்லாம் எதற்காக சொல்கிறேன் என்றால் பயத்தோடோ, வியாபார நோக்கத்துடனோ, பிச்சைக்காரன் மனநிலையிலோ போய் இறைவனை வேண்டுவது என்பது எந்த வகையிலும் நம்மை மேன்மை அடையச் செய்யாது. மனிதர்களாகிய நம்மிடம் தெய்வத் தன்மை புதைந்து கிடக்கிறது. அதை வெளிப்படுத்தும் வல்லமை மனிதர்களாகிய நமக்கு மட்டுமே உண்டு என்பதை உணர்ந்து அன்போடு இறைவனை வழிபடுவதாலும், இறையருள் பெற்ற அருளாளர்களோடு கூடி ஒழுகுவதாலும், பிறர் படும் துன்பங்களைக் களைய நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வதாலும் மட்டுமே நம்மால் அகம், புறம் இரண்டையும் அடக்கி வசப்படுத்தி தவநிலைக்கு முன்னேற முடியும். இத்தகைய செயல்களால் புனிதமும், தியாகமும் வெளிப்படுகின்றது. சுயநலம் பரநலமாக மாறி மனதை அமைதிப்படுத்தி, நல்வழியில் இயங்கத் தூண்டுகிறது. எனவே இறைவழிபாடு என்பது சாதனையில் நுழைய விரும்புபவர்களுக்கு முதல்
No comments:
Post a Comment