நவராத்திரியின் கடைசிநாளான சரஸ்வதி பூஜையன்றும், மறுநாள் விஜயதசமியன்றும்
மரத்தட்டுகளில் அம்பாளுக்குரிய பொருட்களை வைக்க வேண்டும். சரஸ்வதிக்குரிய நைவேத்ய
பொருட்களான பொரி, கடலை, சுண்டல், சர்க்கரைப் பொங்கல், இனிப்பு பண்டங்கள், பழங்கள்,
இன்னும் இதர சித்ரான்ன வகைகளை இலையில் வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, மஞ்சள்,
குங்குமம், நெல், சிவப்பு நூல், பருப்பு வகைகள், கண்ணாடி ஆகியவற்றை மரத்தட்டில்
வைக்க வேண்டும். மரத்தட்டில் பொருட்களை வைத்தால், வீட்டில் தீயசக்திகள் அணுகாது
என்பதும், பகைவர்களின் ஆதிக்கம் ஒடுங்கும் என்பதும் நம்பிக்கை. சரஸ்வதிபூஜை,
விஜயதசமி பூஜைகளை, வீட்டில் சுமங்கலிப் பெண்கள் செய்வது நல்லது
No comments:
Post a Comment