நவராத்திரியில் சண்டி ஹோமம் செய்யப்படும். இது எதிரிகளை அடக்கும். பயத்தை
விரட்டும், மனோபலத்தை வளர்க்கும். இந்த ஹோமம் இப்போது குறிப்பிட்ட சில இடங்களிலேயே
நடத்தப்படுகிறது. இந்த ஹோமத்தைச் செய்யுமளவு வசதியில்லாவிட்டாலும், இது நடக்கும்
இடங்களுக்குச் சென்று அமர்ந்திருந்தாலே போதும். நன்மை கிடைக்கும். இந்த ஹோமத்தை
துர்க்காஷ்டமி என்னும் எட்டாம் நாள், மகாநவமி என்னும் சரஸ்வதி பூஜை நன்னாள் மற்றும்
சதுர்த்தசி திதிகளில் நடத்துவது உத்தமம். இந்த நாட்களில் அம்பாளின் கதையைச்
சொல்பவருக்கும், அதைக் கேட்பவர்களுக்கும் நன்மை உண்டாகும். சதுர்த்தசி திதி
நவராத்திரி கழிந்த பிறகே வரும். இருப்பினும், நவராத்திரியின் துவக்க நாள் முதல்
அதையடுத்து வரும் பவுர்ணமி வரை அம்பாள் வழிபாடு நடத்தலாம் என்ற அடிப்படையில்,
சதுர்த்தசியிலும் சண்டி ஹோமம் நடத்தலாம் என்கிறது மார்க்கண்டேய புராணத்திலுள்ள ஒரு
ஸ்லோகம்.
No comments:
Post a Comment