Friday, October 11, 2013

சமயோசித புத்தி!

சமயோசித புத்தி!


கிருபானந்த வாரியார் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது சிவனின் அருமை பெருமைகளை கூறி வந்தார்.

திடீரென்று, ஒரு சிறுவனை பார்த்து, "முருகனின் அப்பா பெயர் என்ன?" என்று கேள்வி கேட்டார்....
அந்த சிறுவன் சற்றும் தயங்காமல், "சிவாஜி" என்று பதில் கூறினான்.

வாரியார் எந்தவித அதிர்ச்சியையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், சமயத்திற்கு ஏற்றது போல், "பையன் கூறுவது சரி தான்" என்றார்.

இதைக்கேட்டு கூட்டத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதை புரிந்து கொண்ட வாரியார், "பெரியவர்களை நாம் காந்திஜி, நேருஜி என்று மரியாதையுடன் அழைப்பது இல்லையா? அது மாதிரி தான் அந்த பையன் சிவனை "சிவாஜி" என்று மரியாதையுடன் அழைத்து இருக்கிறான்" என்று கூறவும், கூட்டத்தினர் மீண்டும் சிரிப்பலையில் ஆழ்ந்தனர்

No comments:

Post a Comment