Wednesday, October 23, 2013

காலில் விழுந்து வணங்குவது ஏன்?

காலில் விழுந்து வணங்குவது ஏன்?
------------------------------------------------
பழங்காலம் தொட்டே தமிழகத்தில் காலில் விழுந்து வணங்கும் பழக்கம் உள்ளது.இதன் அடிப்படையான காரணம் என்னவெனில்,ஆன்றோர்கள் காலிலும்,ரிஷிகளின் காலிலும் விழுந்து வணங்குவதால் அவர்களின் ஆசியினால் நம்முடைய பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கையாகும்.

பொதுவாகவே உயர்ந்த தர்ம சிந்தனை கொண்ட பெரியோர்களின் காலில் விழுந்தால்,நம் பாவங்கள் விலகி,அவர்கள் செய்த புண்னியங்களும் நமக்கு சேரும்....

சுயலாபத்திற்க்காக பாவிகள் காலில் விழுந்தால் அவர்கள் பாவமும் நம்மை வந்து சேர்ந்துவிடும்.அதேபோல் பணத்திற்க்காகவும் மற்ற தேவைக்காகவும் யார் காலிலும் விழக்கூடாது.

மார்கண்டேயனின் மரணத்தை முன் கூட்டியே அறிந்துகொண்ட அவர் தந்தை வயதான சான்றோர் அனைவரின் காலிலும் விழச்செய்தார்.அதே போல் சப்த ரிசிகள் காலில் விழும்போது அவர்கள் சிரஞ்சீவியாக வாழு என்றார்கள்.அப்புறம்தான் அவர்களுக்கே மார்கண்டேயனின் அல்பாயுசு அமைப்பு தெரிய வந்தது.இருந்தாலும் சப்த ரிஷிகளின் ஆசிர்வாதத்தால் சிவபெருமானால் மார்கண்டேயன் சிரஞ்சிவியாக வாழ்ந்தார் என்பது புரணாமாகும்.

நம்முடைய முதல் தெய்வமான பெற்றோர்கள் காலில் விழுந்து வணங்கினால் நம்முடைய கிரக தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும்.பாவங்கள் விலகி வளமான வாழ்வு அமையும் என்பதே உண்மையாகும்

No comments:

Post a Comment