ஸ்ரீகபாலீஸ்வரர் 108 போற்றி
ஓம் அன்பின் உருவே போற்றி
ஓம் அருளின் வடிவே போற்றி
ஓம் அகிலம் காப்பவா போற்றி
ஓம் அம்பலக் கத்தா போற்றி
ஓம் அம்மையே அப்பா போற்றி
ஓம் அருட் பெருஞ்ஜோதியனே போற்றி
ஓம் அர்த்த நாரீயே போற்றி
ஓம் அண்ணாமலை அண்ணலே போற்றி
ஓம் ஆகமத் தலைவா போற்றி
ஓம் ஆவுடைய லிங்கமே போற்றி
ஓம் ஆனந்த வெள்ளமே போற்றி
ஓம் இகபரம் தருவாயே போற்றி
ஓம் இணையிலா ஈசா போற்றி
ஓம் இசை ஞானப் பொருளே போற்றி
ஓம் இன்னருள் நீயே போற்றி
ஓம் ஈடிலா முதல்வா போற்றி
ஓம் உத்தம நாயகா போற்றி
ஓ
ம் உயிருக்கு உயிரே போற்றி
ஓம் உமையவள் கணவா போற்றி
ஓம் உடுக்கை ஒலித்தவா போற்றி
ஓம் உன்னத உணர்வே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவர் போற்றி
ஓம் எழிலின் வடிவே போற்றி
ஓம் எல்லையும் நீயே போற்றி
ஓம் ஏற்றங்கள் தருவாயே போற்றி
ஓம் ஐயனார் ஆனவா போற்றி ஓம்
ஐஸ்வர்யம் அளிப்போய் போற்றி
ஓம் ஒன்றாக நின்றாய் போற்றி
ஓம் ஒளியின் ஒளியே போற்றி
ஓம் ஓங்கார நாதமே போற்றி
ஓம் ஒளவிதம் ஆனவா போற்றி
ஓம் கண்கண்டத் தெய்வமே போற்றி
ஓம் கண்ணின் மணியே போற்றி
ஓம் கருணைத் திருவே போற்றி
ஓம் கனியின் சுவையே போற்றி
ஓம் கற்பகத் தலைவா போற்றி
ஓம் கபாலம் ஏந்தியவா போற்றி
ஓம் கபாலி ஈஸ்வரா போற்றி
ஓம் கங்கையைச் சுமந்தவா போற்றி
ஓம் காலனை உதைத்தவா போற்றி
ஓம் காமனை எரித்தவா போற்றி
ஓம் காரணப் பொருளே போற்றி
ஓம் கைலாசப் பதியே போற்றி
ஓம் கொன்றை அணிந்தவா போற்றி
ஓம் சக்தியின் தலைவா போற்றி
ஓம் சாரூப நிலையே போற்றி
ஓம் சிவ பத அருளே போற்றி
ஓம் சிவ சிவ சங்கரா போற்றி
ஓம் சிவாய நமவே போற்றி
ஓம் சிவஞானப் பழமே போற்றி
ஓம் சீர் தரும் செம்மலே போற்றி
ஓம் சுந்தர மூர்த்தியே போற்றி
ஓம் சூட்சுமப் பொருளே போற்றி
ஓம் செந்தமிழ் வடிவே போற்றி
ஓம் சொக்கலிங்கமே போற்றி
ஓம் சோம சுந்தரா போற்றி
ஓம் ஞானம் அருள்பவா போற்றி
ஓம் ஞான சம்பந்தா போற்றி
ஓம் தனிப் பெருந்தலைவா போற்றி
ஓம் தட்சிணா மூர்த்தியே போற்றி
ஓம் தணலின் உருவமே போற்றி
ஓம் திருவடிப் பெருமையே போற்றி
ஓம் திருநீற்று நலமே போற்றி
ஓம் தில்லையின் திரு நடனமே போற்றி
ஓம் திருவாலங்காடா போற்றி
ஓம் திருவாசகத் தேனே போற்றி
ஓம் திருமுறைப் பாட்டே போற்றி
ஓம் திங்களை அணிந்தவா போற்றி
ஓம் தீயினை ஏந்தினாய் போற்றி
ஓம் தீர்த்தமும் நீயே போற்றி
ஓம் தேவாரத் திருத்தலமே போற்றி
ஓம் தூக்கிய திருவடியே போற்றி
ஓம் நமச் சிவாயமே போற்றி
ஓம் நடராஜ அழகே போற்றி
ஓம் நாதாந்த வித்தகா போற்றி
ஓம் நான்மறைப் பொருளே போற்றி
ஓம் நித்திய சுகமே போற்றி
ஓம் நீல கண்டா போற்றி
ஓம் நீங்காத நினைவே போற்றி
ஓம் நுண்ணிய வடிவே போற்றி
ஓம் பசுபதி நாதா போற்றி
ஓம் பரம் பொருள் நீயே போற்றி
ஓம் பார்வதி நாதா போற்றி
ஓம் பிட்சாடன அழகே போற்றி
ஓம் புண்ணியப் பலனே போற்றி
ஓம் பொன்னார் மேனியே போற்றி
ஓம் பூரணக் காரணனே போற்றி
ஓம் மன்றிலாடினாய் போற்றி
ஓம் மங்கள மகிமையே போற்றி
ஓம் மஹா தேவனே போற்றி
ஓம் மாமலை வாசா போற்றி
ஓம் மாணிக்கக் கங்கையே போற்றி
ஓம் முக்தி நலமே போற்றி
ஓம் மெய்ப் பொருள் நீயே போற்றி
ஓம் மோனத் தவமே போற்றி
ஓம் வள்ளல் வரமே போற்றி
ஓம் வடிவாம் நடமே போற்றி
ஓம் வானின் மழையே போற்றி
ஓம் வாழ்வு தருவாய் போற்றி
ஓம் விடையில் அமர்ந்தாய் போற்றி
ஓம் வில்வக் கொழுந்தே போற்றி
ஓம் விபீஷணப் பெயரோய் போற்றி
ஓம் வீடுபேறு அளிப்பாய் போற்றி
ஓம் வேதப் பொருளே போற்றி
ஓம் வேண்டும் அருளே போற்றி
ஓம் வேதபுரி ஈசா போற்றி
ஓம் ஹர ஹர சங்கரா போற்றி போற்றி
No comments:
Post a Comment