Thursday, November 7, 2013

நீறில்லா நெற்றிபாழ்

நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ் ஆறில்லா ஊருக் கழகுபாழ்-மாறில் உடன்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே மடக்கொடி யில்லா மனை. ஒவ்வையார் . (பதவுரை) நீறு ...இல்லா நெற்றி பாழ் - விபூதியில்லாத நெற்றி பாழாகும்; நெய் இல்லா உண்டி பாழ் - நெய்யில்லாத உணவு பாழாகும்; ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ் - நதியில்லாத ஊருக்கு அழகு பாழாகும், மாறு இல் உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ் - மாறுபடாத சகோதரர் இல்லாத உடம்பு பாழாகும்; மடக்கொடி இல்லா மனை பாழே - (இல்லறத்திற்குத்தக்க) மனைவியில்லாத வீடு பாழேயாகும் . திருநீற்றினாலே நெற்றியும், நெய்யினாலே உணவும், நதியினாலே ஊரும், துணைவராலே உடம்பும், மனைவியினாலே வீடும் சிறப்படையும்

No comments:

Post a Comment