உடல் உறுப்பு தானம் செய்வது பற்றி உங்கள்
கருத்து
என்ன?
பதிவு செய்யுங்கள்
நண்பர்களே
உடல்
உறுப்பு தானம் செய்வது பற்றி இந்து சமயம் என்ன கூறுகிறது
நமக்கு வரும் இன்னல்கள் முக்கால்வாசி நமது முன்ஜென்ம வினையில் இருந்து தான்
வருகிறது அதனையும் தீர்க்க வேண்டும் அதே போல் இந்த ஜென்மத்திலும் அறிந்து மற்றும் அறியாத
செய்த பாவத்தில் இருந்து நம்மை விடுவித்து நாம் நல்ல நிலையை அடையவேண்டும். இதற்கு தானம் அளிப்பது தான் சிறந்த வழி. தானங்களில் பல வகை தானங்கள்
இருக்கின்றன இப்படி பலவகை தானங்கள் இருந்தாலும் உடல் உறுப்பு தானம் செய்வது பற்றி
இந்து சமயத்தில் கூறப்படவில்லை.
இது தற்போது வந்தது ஆனாலும் உடல் உறுப்பு தானம் செய்வது தவறு இல்லை.பொதுவாக
நமக்குத்
தெரிந்து
ரத்ததானம், கண்தானம்
சிறு
நீரககதானம்
இந்த
தானங்கள்
தான்
அதிக
அளவில்
இருந்து
வருகின்றன.
ஒருவர்
இறந்தால் ஒன்பது பேருக்கு வாழ்வு. இது பழமொழி இல்லை. நவீன அறிவியலின் உயிர்மொழி.
இறந்தபின்னும் வாழும் அதிசயம் சொர்க்கத்தில் இல்லை. இங்கே பூமியில், உடல் உறுப்பு
தானத்தின் மூலம் அதனை நிகழ்த்தலாம். இறந்தபின் மண்ணில் புதையுண்டு வீணாகும்
உறுப்புகளை, உயிருக்கு போராடுபவர்களுக்கு தானம் செய்தால், இறந்தவர் இன்னும்
உயிரோடு இருப்பதாக தானே அர்த்தம். இறந்து போனவர்கள், தானம் பெற்றவர்கள் மூலம்
பல்லாண்டு வாழ்வார்கள் என்ற நம்பிக்கையில், உறுப்புகளை தானம் செய்யலாமே.
உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும்.
முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர்
தருவது.
ஒருவர் உயிருடன் இருக்கும் போது உடலிலுள்ள
உறுப்பை தானம் தருவது.
உடல் உறுப்பு தானம்'' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின்
ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து
தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும்
ஒருவர் இறந்த பின்னர் உடலிலுள்ள
உறுப்பை தானம் தருவது
ஒருவர் இறந்த பின்னர் உறுப்புக்களை தானமாக அளிக்க முடியும்
இதன் மூலம் பலரை வாழவைக்கலாம்.
எனவே மொத்தம் 25 வகையான
உறுப்புக்களை தானமாக அளிக்க முடியும்,.
ஒருவர் தன் உடலை தானமாக தருவதால் சுமார் 10 பேர்
உயிர் பெற வாய்ப்புள்ளது.
ஒருவர் இறந்த
பின்னும் வாழவைக்க வழியா
இல்லை?
ஒருவர் இறக்க முன்னும் வாழ வைக்க வழியா இல்லை?
சிந்திப்போம் செயல் படுவோம்
No comments:
Post a Comment