Monday, November 11, 2013

ஒன்றரை அடி உயர அபூர்வ ருத்ராட்சம்

ஒன்றரை அடி உயர அபூர்வ ருத்ராட்சம்!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மகேஷ்வரன், ஒன்றரை அடி உயர ருத்ராட்சத்தை பாதுகாத்து வருகிறார். கிருஷ்ணன்கோவில் காயத்ரி தியான பீடத்தை நடத்தி வரும், ஸ்ரீவில்லிபுத்தூர் வக்கீல் மகேஸ்வரன், ருத்ராட்ச மரம் வளர்க்கிறார். தியான பீடத்திற்கு வந்த, வட மாநில பக்தர்கள், முக்கால் அடி, ஒரு அடி, ஒன்றே கால் அடி, ஒன்றரை அடி உயரமுள்ள ஒரு முக ருத்ராட்சங்கள் நான்கை வழங்கினர். இதை அவர் பாதுகாத்து வருகிறார். அவர் கூறியதாவது,"" 21 முகம் வரை ருத்ராட்சம் கிடைத்தாலும், ஒரு முக ருத்ராட்சம் கிடைப்பது அரிது. இதை வீட்டில், செம்பு, பித்தளை, வெள்ளி குடங்களில் , கண்ணாடி கூண்டில் வைத்து பாதுகாத்து வருகிறேன். மேலும், கவுரி சங்கரம், திரிவேணி அம்சம், சூரிய கலை, சந்திர கலை உள்ளிட்ட வடிவங்களிலும், எட்டு அபூர்வ ருத்ராட்சங்களும் உள்ளன. இவற்றை, தைப்பூச திருநாளன்று, காய்த்ரி தியான பீடத்தில், பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்க உள்ளேன். இதை, ஆண்டுக்கொரு ஒருமுறை, வேப்ப எண்ணெய் பூசி, பாதுகாத்து வருகிறேன், என்றார். இவரிடம் 98424 09306ல் பேசலாம்

No comments:

Post a Comment