கண்டொன்று சொல்லேல்
கண்ணால் கண்டதை உண்மை எதுவென்று அறியாமல் பொறாமையின் காரணமாக நடக்காத ஒன்றை நடந்தது போல் புறங்கூறுவது மீளமுடியாத பாவத்தில் ஆழ்த்திவிடும். அறம் அல்லாதவற்றை ஒருவன் செய்யும்போது அது அவனை மட்டும் பாதிக்கும் ஆனால் புறங்கூறுவதலால் சிலசமயம் ஒரு குடும்பத்திற்கோ அல்லது சமுதாயத்திற்கு பாதிப்பு ஏற்படும் அதனால்தான் ஔவையார் "கண்டொன்று சொல்லேல்" என அறிவுரை கூறுகிறார்.
உதாரணமாக மாப்பிளை வீட்டார் பெண்ணைப் பற்றி விசாரிக்ககும்போது அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பொறாமையின் காரணமாக முரணாக கூறினால் அப்பெண்ணின் வாழ்க்கை பாதிப்படையும் ஆனால் பெண் வீட்டார் புண்ணியம் செய்திருந்தால் மாப்பிளை வீட்டிற்கு அது பொய்யான தகவல் என உணர்த்தப்படும். ...
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.
சமுதாயத்தில் உள்ள சிலர், பிறர் மகிழ்ச்சியாக உண்டு, உடுத்து இருப்பதைப் பார்த்து பொறாமைப்படுவார்கள். இதனால் அவர்களைப் பற்றி ஏதாவது குறைக்கூறிக் கொண்டேயிருப்பார்கள். எனவே பிறர் கூறுவதை அப்படியே நம்பாமல் அதில் உள்ள உண்மையை ஆராய்ந்துதான் ஏற்கவேண்டும்.Mehr anzeigen

No comments:
Post a Comment