Sunday, December 1, 2013

யாகாவார் ஆயினும் நாகாக்க;

யாகாவார் ஆயினும் நாகாக்க;
 
கடிவது மற

ஒரு மனிதனின் பாவச்சுமைக்கு காரணமான வினை வழியானது மனம், மெய், மொழி மூலம் வந்தாலும் எண்பது சதவீதத்திற்கு மேலாக அவனது வாக்கு வழியாக அதாவது நாவினால் உரைக்கப்படுகின்ற சொற்குற்றத்தினால்தான் வருகின்றது.

எந்த நாவானது கடுமையான சொற்களை பேசி அவனை பாவியாக்கின்றதோ, அதே நாவானது நல்லவைகளை சொல்லி ஞானிகளை புகழை உரைக்குமானால் அந்த நாவே அவனை மேல்நிலைக்கு கொண்டு சென்று வளமுடன் வாழ வழி செய்திடும். மனிதன் வாழ்தும் வீழ்வதும் அவனது நாவடக்கத்தில் தான் பெரும்பகுதி உள்ளது. ஆதலால் ஒருவன் பேசும்போது நற்சொற்களை பயன்படுத்தி மென்யாக பேசவேண்டுமேயன்றி கடுமையாகி பேசி பிறர்மனம் புண்பட நடப்பானானால் அவன் பேசிய சொற்களே அவனை அழித்து மீண்டும் அவன் பிறப்பதற்கு அதுவே காரணமாக அமைந்து விடும்....

ஒருவன் சிந்தையால் செய்த குற்றங்களுக்கும், உடலால் செய்த குற்றங்களுக்கும் மன்னிப்புகளையும் பரிகாரங்களையும் செய்து காலத்தே மாற்றி விடலாம். ஆனால் ஒருவன் நாவினால் உரைத்த தீய சொல்லானது ஒருவனை பாதிக்குமானால் அது அவனது ஆன்மாவை தாக்கி அவனால் அதை மறக்கமுடியாமலும் பழிவாங்கும் உணர்ச்சியை தூண்டி பேசியவனை அழித்து இருவரையும் பாவியாக்கி விடும்.ஒருவர் மற்றவரைப் பாரத்து கோபமாக பேசுவதைத் தவிர்த்துவிட வேண்டும்.

"யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு" (குறள் - 127)

"தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு" (குறள் - 128)

No comments:

Post a Comment